சென்னை, நாகர்கோவிலில் திடீர் மழை!
சென்னை:
கோடை வெயிலுக்கு இடையே திடீர்ஆச்சரியமாக சென்னை நகரில் இன்று காலை பரவலாக மழை பெய்தது. அதேபோலநாகர்கோவிலிலும் நல்ல மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் கடும் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மக்களின் மண்டை காய்ந்து வெளியில் நடமாடவே பயமாகஉள்ளனர். குறிப்பாக வேலூர், சேலம், அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளில் வெயில் கடுமையாக உள்ளது.
கடும் வெயிலுக்கு இதமாக தமிழகத்தில் ஆங்காங்கே சில இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இந் நிலையில்மழையைப் பார்த்தே பல மாதங்கள் ஆகி விட்ட சென்னை நகரில் இன்று காலை திடீரென ஆங்காங்கே பரவலாக லேசான மழைபெய்தது. சில நிமிடங்கள் கூட நீடிக்காத நிலையில் பெய்து விட்டு ஓடி விட்டது இந்த திடீர் மழை.
சிறிது நேரமே பெய்தாலும் கூட மக்கள் மனதில் லேசான மகிழ்ச்சியும் எட்டிப் பார்த்தது. தொடர்ந்து இரு நாட்களுக்கு இதுபோலஅவ்வப்போது மழை பெய்யலாம் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
இதேபோல, கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று காலை நல்ல மழை பெய்துள்ளது. குறிப்பாகநாகர்கோவில், தோவாளை உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ந்துள்ளனர்.தொடர்ந்து 10 நாட்களுக்கு இவ்வாறு பெய்தால் குடிநீர்ப் பிரச்சினை தீரும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
-
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
’குதிரை பேரம்’ கலைஞர் பண்ணப்போ என்ன பண்ணீங்க! திடீரென டோனை மாற்றிய வைகோ! துரை வைகோவின் மீட்டிங்! -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
ரூ.2500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? நிதியமைச்சர் மரியவில்சன் கொடுத்த அப்டேட்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 எப்போது? பட்டென அப்டேட் கொடுத்த மரியவில்சன்! 2 வாரங்கள் கழித்தா?












Click it and Unblock the Notifications