ரஜினி ரசிகர்கள் எதிர்ப்பால் திமுக கூட்டணிக்கு பாதிப்பில்லை: கருணாநிதி
சென்னை:
பாமக போட்டியிடும் 6 தொகுதிகளில் பா.ஜ.க.- அதிமுக கூட்டணியை ஆதரிக்க ரஜினி ரசிகர்கள்முடிவெடுத்திருப்பது திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பை பாதிக்காது என்று திமுக தலைவர் கருணாநிதிகூறியுள்ளார்.
இன்று நிருபர்களிடம் கருணாநிதி கூறியதாவது:
பா.ம.கவுக்கு எதிராக 6 தொகுதிகளில் பா.ஜ.க- அதிமுக கூட்டணியை ஆதரிப்பதாக ரஜினி ரசிகர் மன்றங்கள் கூறிஇருப்பது பற்றி பெரிதாக சொல்வதற்கு எதுவுமில்லை. ரஜினி மன்றத்தின் முடிவு எங்கள் கூட்டணியின் வெற்றிவாய்ப்பை பாதிக்காது என்று கருதுகிறேன்.
ரசிகர் மன்றங்களின் முடிவை ரஜினியும் ஆதரிக்கிறாரா என்பது குறித்து என்னால் ஊகிக்க முடியவில்லை.பத்திரிக்கைச் செய்திகளை வைத்து மேற்கொண்டு எதுவும் சொல்ல விரும்பவில்லை.
மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டுக்காரர்கள் இந்தியாவில் உயர் பதவிக்கு வருவதை தடுக்க சட்டம்கொண்டு வருவோம் என்று துணைப் பிரதமர் அத்வானி கூறி இருக்கிறார். சோனியாவை ராஜீவ் திருமணம்செய்வதற்கு முன்பே இதுபற்றி பேசியிருக்க வேண்டும். அல்லது ராஜீவ் அரசியலுக்கு வரும்போதே பேசி இருக்கவேண்டும். இத்தனை ஆண்டு காலம் இந்த அரசியல்வாதிகள் எங்கிருந்தார்கள் என்று தெரியவில்லை.
டான்சி ஊழல் வழக்கில் முதல்வர் ஜெயலலிதா குற்றமற்றவர் என்று உச்ச நீதிமன்றம் கூறியதை ஏற்றுக்கொண்டார்கள். ஆனால், சோனியா காந்தி இந்தியர்தான் என்று உச்ச நீதிமன்றம் கூறியதை இவர்கள் ஏன் ஏற்கமறுக்கிறார்கள்?
மேலும் கலைக்கப்பட்ட மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவியை வகித்தார் சோனியா. அதுகூடஇந்தியாவில் உயர்ந்த பதவிதான். அப்படியிருக்கும்போது அவர் பிரதமராக வருவதை மட்டும் ஏன் தடை செய்யவேண்டும்? இந்தியாவில் பிறந்த முஷாரப் பாகிஸ்தான் அதிபராக இருக்கிறார். பாகிஸ்தானில் பிறந்த ஒருவர்(அத்வானி) இங்கு உயர் பதவியில் இருக்கிறார் என்பதையும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
அப்போது ராகுல் காந்தி கொலம்பிய பெண்ணைத் திருமணம் செய்யப்போவதாக செய்திகள் வருகிறதே என்று ஒருநிருபர் கேட்டதற்கு, ஏன் வெளிநாட்டவர் பிரச்சனையைக் குறித்து மட்டும் திரும்பக் திரும்ப கேட்கிறீர்கள் என்றுநிருபர்களைப் பார்த்துக் கேட்டார் கருணாநிதி.
தொடர்ந்து அவர் கூறியதாவது:
பிரதமர் வாஜ்பாயையும், அத்வானியையும் பிரிக்க நான் முயற்சி செய்கிறேன் என்று பா.ஜ.கவின் அகில் இந்தியச்செயலாளர் இல.கணேசன் குற்றம் சாட்டி இருக்கிறார். நாங்கள் முயற்சி செய்யாமலேயே அவர்களுக்குள் கருத்துவேறுபாடு இருப்பது ஊரறிந்த ஒன்றுதான். தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் இருந்தோம் என்பதால் அந்தபிரச்சினையை தெளிவாக புரிந்து கொண்டுள்ளோம்.
சில ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டுக்குப் போய் வந்த வாஜ்பாய், அடுத்த பா.ஜ.க. ஆட்சியை அத்வானி தான்நடத்துவார் என்று குண்டு போட்டார். வாஜ்பாய் ஊரில் இல்லாத நேரத்தில் இங்கு சிலர் (அத்வானி கோஷ்டி)கட்சியிலும் ஆட்சியிலும் செய்த விஷயங்களை மனதில் வைத்து தான் அவ்வாறு வாஜ்பாய் பேசினார்.
மேலும் வாஜ்பாயும் அத்வானியும் ராமனும் பரதனும் போல என்று இல.கணேசன் ஒப்புமைப்படுத்தியுள்ளார்.வழக்கமாக ராம-லட்சுமணன் போல என்று தான் சொல்வார்கள். ராமனின் செருப்பையும் ஆட்சியையும் பறித்துக்கொண்டு ராமனை 14 ஆண்டுகள் காட்டில் வெறும் காலுடன் நடக்கவிட்டவர் பரதன். அதனால் தான் தான்அத்வானியை பரதனுடன் ஒப்பிட்டு உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார் கணேசன்.
தமிழகத்தில் திமுக கூட்டணி வெல்லும் என்ற கருத்து கணிப்பு முடிவு குறித்து நான் ஏதும் சொல்ல விரும்பவில்லை.தமிழகத்தில் ஜெயலலிதாவுக்கு எதிரான மக்கள் மன நிலையை நாங்கள் நனறாகவே உணர்ந்துள்ளோம். அதேநேரத்தில் கருத்துக் கணிப்புகளை வெளியிடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் முடிவு செய்தால் திமுக அதைஎதிர்க்காது.
சட்டசபையில் தன்னுடன் விவாதம் நடத்த தயாரா என்று முதல்வர் ஜெயலலிதா எனக்கு சவால் விடுத்து இருக்கிறார்.2001-ம் ஆண்டு ஜெயின் கமிஷன் மற்றும் சர்க்காரியா கமிஷன் ஆகியவை குறித்து திமுக பொருளாளர் ஆற்காடுவீராசாமி விவாதம் நடத்த முன்வந்தார்.
அப்போது இது பற்றி எல்லாம் பேசி சட்டசபை நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று கூறியவர்ஜெயலலிதாதான்.
தயாநிதி மாறனுக்கு நான் மத்திய அமைச்சர் பதவி கேட்கவில்லை. சென்னையில் மருத்துவமனையில் மாறன்இருந்தபோது அவரை பார்க்க வாஜ்பாய் வந்தார். அப்போது காவிரி பிரச்சினைக்கு முன்னுரிமைகொடுக்கும்படிதான் கேட்டுக் கொண்டேன்.
மாறன் மறைவுக்கு பிறகு வாஜ்பாய் தொலைபேசியிலும், பா.ஜ.க. தலைவர் வெங்கையா நாயுடு நேரிலும் வந்துமாறனுக்கு பதில் யாருக்கு பதவி கொடுக்க வேண்டும் என்று கேட்டபோது கூட செயற்குழு கூடி முடிவெடுப்போம்.என்றுதான் கூறினேன். இப்படி இருக்கும் போது தயாநிதி மாறனுக்கு எப்படி நான் அமைச்சர் பதவி கேட்பேன்?என்றார் கருணாநிதி.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ












Click it and Unblock the Notifications