பேச்சளவில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு, தேர்தலில் இல்லை..
சென்னை:
பெண்களுக்கு 33 சதவீத இட ஓதுக்கீடு வழங்கப்பட வேண்டும் குரல் எழுப்பி வரும் அரசியல் கட்சிகள் தங்களதுவேட்பாளர் பட்டியலில் அத்தகைய ஒதுக்கீடை அமல்படுத்தவில்லை.
மக்களவையில் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டு சட்டத்தை நிறைவேற்றப் பாடுபடுவோம் என்று தமிழகஅரசியல் கட்சிகள் அனைத்தும் கூறிவருகின்றன. ஆனால் மக்களவைக்கான தேர்தலில் தங்கள் கட்சி சார்பில்நிறுத்தப்பட்டிருக்கும் வேட்பாளர்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடை எந்த கட்சியும் செய்யவில்லை.
பெண் முதல்வராக இருக்கும் ஜெயலலிதா கூட தனது கட்சி வேட்பாளர்களில் பெண்களுக்கு அதிகவாய்ப்பளிக்கவில்லை. 33 தொகுதி வேட்பாளர்களில் பாதர் சயீத் (தென் சென்னை), ராஜலட்சுமி ராஜன்(வந்தவாசி) ஆகிய இருவர் மட்டுமே பெண்கள்.
அதிமுகவின் தேர்தல் அறிக்கையில், சட்டசபை மற்றும் நாடாளுமன்றம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் உரியஇட ஓதுக்கீடு அளிக்கப் பாடுபடுவோம் என்று கூறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
திமுகவில் கிராம மட்டத்திலிருந்து தலைமைக்கழகம் வரை அனைத்துப் பதவிகளிலும் பெண்கள் மற்றும்தலித்துக்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என்று அக்கட்சி உறுதியளித்திருந்தது. ஆனால் கட்சியின்வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்களில் 3 பேர் மட்டுமே பெண்கள்.
திருச்செங்கோட்டில் சுப்புலட்சுமி ஜெகதீசன், ராமநாதபுரத்தில் பவானி ராஜேந்திரன், திருச்செந்தூரில் ராதிகாசெல்வி ஆகிய 3 பேரைத் தவிர மீதி 12 தொகுதிகளிலும் ஆண்களே போட்டியிடுகிறார்கள்.
6 தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ.க. புதுவையில் மட்டுமே பெண் வேட்பாளரை (லலிதா குமாரமங்கலம்)நிறுத்தியுள்ளது. பாமக (6 தொகுதிகள்), மதிமுக (4 தொகுதிகள்), இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஆகிய கட்சிகள் மருந்துக்குக்கூட ஒரு பெண் வேட்பாளரை நிறுத்தவில்லை.
10 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ், 2 தொகுதிகளில் ஆண் வேட்பாளர்களைத்தான் அறிவித்துள்ளது.மீதியிருக்கும் 8 தொகுதிகளில் ஓரிடம் மட்டுமே பெண் வேட்பாளருக்குத் தரப்படும் என்று தெரிகிறது.
தமிழகத்தில் 35 தொகுதிகளில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர் என்பதுகுறிப்பிடத்தக்கது. தமிழக மொத்த வாக்களார்களின் எண்ணிக்கை 4.71 கோடி. இதில் பெண் வாக்காளர்களின்எண்ணிக்கை 2.39 கோடியாகும்.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications