ரஜினி மன்றத்தில் பிளவு!
கடலூர் & பாண்டிச்சேரி:
பாமக போட்டியிடும் தொகுதிகளில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவளிப்பது என்ற ரஜினியின் முடிவுக்குபாண்டிச்சேரியில் உள்ள 5 மன்றங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதே போல கடலூர் ரஜினி மன்றத்தினர்ரஜினியின் கொடும்பாவியை எரித்து தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
திருக்கனூர் ராகவேந்திரா ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம், கோவிந்தசாலை எழில்வேந்தன் ரஜினிகாந்த் ரசிகர்நற்பணி மன்றம், குமாரப்பாளையம் மீண்டும் மகாத்மா ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம், கூனிச்சசம்பட்டுஅருணாச்சலம் ரஜினிகாந்த் ரசிகர் மன்றம், திருக்கனூர்பேட் பாட்ஷா ரஜினி ரசிகர் மன்றங்களைச் சேர்ந்தவர்கள்புதுவை மாநில ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றங்களின் கூட்டமைப்பு என்ற பெயரில் வெளியிட்ட அறிக்கையில்கூறியுள்ளதாவது,
ரஜினியைப் பற்றி பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம் செய்தது வருத்தத்துக்குரியதுதான். அதற்காக அவரைவிமர்சித்து கருத்துத் தெரிவித்திருக்கலாம்.
அதை விடுத்து ரஜினி ரசிகர் மன்றங்களைத் தேர்தலில் பழித் தீர்க்கும் மன்றங்களாக பயன்படுத்துவதை நாங்கள்கண்டிக்கிறோம். தமிழக மக்களின் நலனுக்காக ரஜினி தனிக்கட்சி தொடங்கினால் உயிரையும் கொடுத்துகட்சிப்பணி ஆற்ற தயாராக இருக்கிறோம்.
காமராஜ் ஆட்சி நடத்துகிறார் புதுவை முதல்வர் ரங்கசாமி. அவர் ஆதரிக்கும் பாமக வேட்பாளர் ராமதாஸின்வெற்றிக்குப் பாடுபடுவோம் என்று கூறியுள்ளனர்.
கொடும்பாவி எரிப்பு:
இந் நிலையில் கடலூர் புதுப்பாளையத்தில் செயல்பட்டு வரும் கலையுலக ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தினரும்,அண்ணா நகரில் செயல்படும் தமிழக தளபதி ரஜினி மன்றத்தினரும் அதிமுக-பா.ஜ.கவுக்கு ஆதரவு தரும்ரஜினியின் முடிவை எதிர்த்து மன்றங்களைக் கலைப்பதாக அறிவித்துள்ளனர்.
மேலும் உழவர் சந்தை அருகே கூடிய இவர்கள் ரஜினியின் உருவப் பொம்மையையும் எரித்தனர். அதிமுகவைஆதரிக்கும் ரஜினியின் அறிவிப்பு வெளியான இந்த நாள் ஒரு கருப்பு நாள் என அவர்கள் கூறினர்.
இதற்கிடையே, இது குறித்து புதுவை மாநில ரஜினிகாந்த் நற்பணி மன்றச் செயலாளர் ரஜினி சங்கர் கூறும்போது,திடீரென்று இக்கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. முறையாக மன்றத்தைப் பதிவு செய்யாதவர்கள் இவ்வாறுகூறியுள்ளனர் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications