ராகுலின் கன்னிப் பேச்சு கண்களை நனைக்கிறது: கருணாநிதி
சென்னை:
அமேதி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தியின் கன்னிப் பேச்சு கண்ணீரை வரவழைக்கிறது என்று திமுகதலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
முரசொலியில் அவர் எழுதியிருப்பதாவது:
அமேதி தொகுதியில் தனது பிரசாரத்தைத் தொடங்கிய ராகுல் தனது கன்னிப் பேச்சில், அரசியல் எனதுகுடும்பத்தைக் காயப்படுத்தியது. எனது பாட்டியும், தந்தையும் கொல்லப்பட்டார்கள். அவர்கள் வழியில்நாட்டுக்குத் தொண்டாற்றவே நான் அரசியலுக்கு வந்திருக்கிறேன்.
எங்களது குடும்பத்தைப் பற்றிய பா.ஜ.கவினரின் விமர்சனங்கள் குறித்து எனக்குக் கவலையில்லை. எங்களைஅந்நியர் என்று திட்டினாலும், ஏசினாலும் நாங்கள் இதயப்பூர்வமாக இந்தியர்கள் தான் என்று கூறியுள்ளார்.ஓட்டுக்காக நான் அரசியலுக்கு வரவில்லை. இதயங்களை வெல்லவே வந்திருக்கிறேன் என்று பேசியிருக்கிறார்.கொன்றாலும் என் இதயம் இந்தியாவுக்காகவே துடிக்கும் என்று அந்த இளைஞர் சொல்லியிருக்கிறார்.
அந்த இளம் நெஞ்சின் கனிவான கன்னிப் பேச்சு என் கண்களில் நீர் முட்ட வைத்துவிட்டது. நேருவின் கொள்ளுப்பேரன் நம் நெஞ்சையள்ளும் பேரனாக அல்லவா அரசியலில் பிரவேசித்திருக்கிறார். அவருக்கு என்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
திமுக ஆட்சியில் தமிழுக்காக சிறப்பாக தொண்டாற்றியவர்களுக்கு தரப்பட்ட வந்த தந்தை பெரியார், பாரதியார்விருது, பாரதிதாசன் விருது, திரு.வி.க.விருது, கி.ஆ.பெ. விருது ஆகியவை ஜெயலலிதாவின் ஆட்சியில் கடந்த 2ஆண்டுகளாக யாருக்கும் தரப்படவில்லை.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
-
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications