ஜனநாயகத்துக்கும் ஜெயலலிதாவுக்கும் சம்பந்தமில்லை...: நல்லக்கண்ணு
திருச்சி:
முதல்வர் ஜெயலலிதாவிடம் ஜனநாயகம் பற்றி பாடம் படிக்க வேண்டிய அவசியம் ஜனநாயக முற்போக்குக்கூட்டணிக்கு இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் நல்லகண்ணு கூறியுள்ளார்.
திருச்சியில் ஏஐடியூசி பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
அதிமுக அரசுக்கு சட்டசபை ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையில்லை. அதனால்தான் பட்ஜெட் விவாதம் கூடநடத்தப்படவில்லை. ஜனநாயகம் குறித்து ஜெயலலிதாவிடம் பாடம் படிக்க வேண்டிய எங்களுக்கு இல்லை.அரசியல் அனுபவமின்மை, அரசியல் கத்துக்குட்டி என்பது ஜெயலலிதாவுக்குத்தான் பொருந்தும்.
வறட்சி ஏற்படுவது இயற்கை தான் என்றாலும், வறட்சியை சமாளிப்பதற்கு தமிழக அரசு எந்த நடவடிக்கையும்மேற்கொள்ளவில்லை. காவிரி டெல்டா பகுதி மட்டுமின்றி தமிழகம் முழுவதும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது.30, 40 வருடங்கள் வளர்க்கப்பட்ட தென்னை மரங்கள் காய்ந்து விறகுக்காக வெட்டப்படுகின்றன.
வறட்சியால் துயரப்படும்போது, எதிர்க்கட்சியினர் மீது வசை பாடும் ஜெயலலிதாவின் பிரசாரத்தை மக்கள்ரசிக்கவில்லை.
ஜெயின் கமிஷன், சர்க்காரியா கமிஷன் குறித்து சட்டசபையில் விவாதிக்கத் தயாரா என்று திமுக தலைவர்கருணாநிதிக்கு ஜெயலலிதா சவால் விடுத்துள்ளார். விவாதம் நடத்தப்பட வேண்டிய விஷயங்களுக்கே விவாதம்நடத்தப்படுவதில்லை. மானியக் கோரிக்கைகள், வெட்டுத் தீர்மானங்கள், விவாதங்கள் நடத்தப்படாமல் பட்ஜெட்நிறைவேற்றப்பட்டது தமிழக சட்டசபையில் மட்டும்தான்.
ஒரு நபரை மட்டும் பிரதமர் பதவிக்கு முன்னிருத்துவது ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையில்லாத செயல்.பெரும்பான்மை பெறும் கட்சியைச் சேர்ந்தவரே பிரதமராவார். பிரதமர் யார் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்.
மத்திய, மாநில அரசுகள் அதிகார துஷ்பிரயோகம் செய்கின்றன. அரசு அலுவலர்களும் சில இடங்களில்ஆட்சியாளர்களுக்கு ஒத்துழைக்கின்றனர். தேர்தல் ஆணையம் இது தொடர்பாக எச்சரித்தும் இந்த வேலைதொடர்கிறது.
கடந்த சில ஆண்டுகளாக பா.ஜ.கவை விமர்சித்த வந்த ஜெயலலிதா இப்போது சந்தர்ப்பவாதக் கூட்டணிஅமைத்துள்ளார். ஆனால் பா.ஜ.கவுக்கு எதிரான கொள்கையில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எங்களதுகொள்கையில் குழப்பமில்லை. கட்சியின் தேர்தல் அறிக்கையை வரும் 5ம் தேதி வெளியிடுகிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications