அரக்கோணம்: பா.ம.கவில் சேர்ந்த ரஜினி ரசிகர்கள்
அரக்கோணம்:
அதிமுக-பா.ஜ.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த ரஜினியை எதிர்த்து அவரது 300 ரசிகர்கள், பா.ம.கவில்சேர்ந்துள்ளனர்.
பள்ளிப்பட்டில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில் அவர்கள் அக் கட்சியில் சேர்ந்தனர். இங்குதிமுக-பா.ம.க. தொண்டர்கள் கூட்டத்திற்கு ராமதாஸ் ஏற்பாடு செய்திருந்தார். அக் கூட்டம் நடந்துகொண்டிருந்தபோது அந்திமாஞ்சேரி பேட்டையைச் சேர்ந்த 300 ரசிகர்கள் அங்கு வந்தனர்.
இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. வந்தவர்கள் ரஜினியை கண்டித்தும், ராமதாஸை ஆதரித்து கோஷம் எழுப்பியபின்னரே விவரம் தெரியவந்தது. ராமதாசும் டென்சனில் இருந்து விடுபட்டார்.
இதையடுத்து அவர்கள் ராமதாசுக்கு சால்வை அணிவித்து பா.ம.கவில் சேருவதாக அறிவித்தனர்.
பின்னர் அவர்களில் அசோக்குமார் என்ற ரசிகர் மைக்கைப் பிடித்தார். அவர் பேசுகையில்,
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனே காப்பாற்ற முடியாது என்று பேசிய ரஜினிஇப்போதுஅதே ஜெயலலிதாவை ஆதரிப்பது பைத்தியக்கரத்தனமாக உள்ளது. தமிழகத்தில் 1996ம் ஆண்டில்ஜெயலலிதாவால் எந்த அளவுக்கு மக்கள் பாதிக்கப்பட்டார்களோ, அதை விட அதிகமான பாதிப்பில் இப்போதுஉள்ளனர்.
மாநிலம் முழுவதுமே ஜெயலலிதாவுக்கு எதிரான அலை வீசிக் கொண்டிருக்கும் நிலையில் எங்களை அவருக்காகவக்காலத்து வாங்கும்படி சத்யநாராயணா மூலம் ரஜினி சொல்லி அனுப்பியிருப்பது அசிங்கமாக உள்ளது.பா.ம.கவை எதிர்ப்பது என்றால் நேரடியாக எங்களை களத்தில் இறக்கிவிட்டிருக்கலாம். நாங்களும் அதற்குத்தயாராகவே இருந்தோம்.
ஆனால், ஜெயலலிதாவை ஆதரித்து வேலை பார்க்கச் சொன்னால் அதை ஏற்க எஙகள் மனம் ஒப்பவில்லை.இதனால் மன வருத்தத்துடன் தான் மன்றத்தில் இருந்து விலகி இருக்கிறோம். அரக்கோணம் தொகுதியில்ஜெயலலிதா ஜெயிக்கக் கூடாது. அதைத் தடுக்கும் சக்தி பா.ம.க-திமுக கூட்டணிக்கே உண்டு. இனி பா.ம.கவில்இணைந்து அதிமுவை எதிர்த்து வேலை பார்ப்போம் என்றார்.
இதைத் தொடர்ந்து ராமதாஸை தங்கள் பகுதிக்கு அழைத்துச் சென்ற ரஜினி ரசிகர்கள், ரஜினி மன்றக் கொடியைஇறக்கிவிட்டு அதில் பா.ம.க கொடியை ஏற்றுமாறு ராமதாசிடம் கூறினர். முதலில் யோசித்த ராமதாஸ், பின்னர்விறுவிறுவென கொடியேற்றிவிட்டுச் சென்றார்.
ராமதாஸ் முன்னிலையில் பா.ம.கவில் சேர்ந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் வன்னிய சமூக இளைஞர்கள்என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications