தேர்தல் பாதுகாப்பு: அதிகாரிகளுடன் டிஜிபி ஆலோசனை
சென்னை:
தமிழகத்துக்கு பிரசாரம் செய்யும் வர இருக்கும் அகில இந்திய தலைவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது பற்றிகாவல் துறை உயர் அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்தினார்கள்.
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பிரதமர் வாஜ்பாய், துணைப் பிரதமர் அத்வானி, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா உள்பட பல முக்கிய பிரமுகர்கள் தமிழ்நாட்டுக்கு தேர்தல் பிரசாரம் செய்யவருகிறார்கள்.
அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு பற்றி, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தமிழக போலீஸ்டி.ஜி.பி. கோவிந்த் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் மத்திய உளவு பிரிவு சிறப்பு இயக்குனர் நரசிம்மன், இணை இயக்குனர் எஸ்.ஏ.குப்தா, கறுப்புபூனைப்படை ஐ.ஜி. அனில்சிங், தொழில்நுட்ப இயக்குனர் வி.கே.சக்சேனா.
தமிழக கூடுதல் டி.ஜி.பி. வெங்கடகிருஷ்ணன், சென்னை போலீஸ் கமிஷனர் நடராஜ், மதுரை, திருச்சி, நெல்லை,சேலம், கோவை மாநகர போலீஸ் கமிஷனர்கள் உள்ளிட்ட போலீஸ் துறை உயர் அதிகாரிகள் இந்த கூட்டத்தில்கலந்து கொண்டனர்.
காலை 10 மணிக்கு முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்ற கூட்டத்தில் பிரசாரத்துக்கு வரும் தலைவர்களுக்குபாதுகாப்பு கொடுப்பது பற்றியும், பதட்டமான சூழ்நிலை எங்கெங்கு ஏற்படும் அந்த பகுதிகளுக்கு போலீஸ்பாதுகாப்பு கூடுதலாக அனுப்புவது பற்றியும் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த டி.ஜி.பி. கோவிந்த் கூறியதாவது:
தேர்தல் பாதுகாப்புக்கு 65 கம்பெனி மத்திய போலீஸார் தமிழ்நாட்டுக்கு வருகிறார்கள். ஒவ்வொரு கம்பெனியிலும்90 போலீசார் வீதம் இருப்பார்கள்.
25 தொகுதிகளில் சில இடங்கள் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில்ஈடுபடுத்தப்படுவார்கள்.- தமிழ்நாட்டுக்கு வரும் முக்கிய தலைவர்களுக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் எதுவும்கிடையாது.
தேர்தல் பிரசாரத்துக்கு அகில இந்திய பிரமுகர்கள் எப்போது வருவார்கள் என்று இன்னும் தேதிஅறிவிக்கப்படவில்லை. எப்போது வந்தாலும் பாதுகாப்பு கொடுக்க தயார் நிலையில் உள்ளோம். முக்கியபிரமுகர்கள் 13 பேர்களுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு கொடுக்க இருக்கிறோம். அவர்கள் தங்கும் இடங்களுக்குக்கூடுதல் பாதுகாப்பு கொடுக்கப்படும் என்றார்.
-
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications