சு.சுவாமி தலைமையில் உதயமானது 4-வது கூட்டணி !
சென்னை:
சுப்பிரமணியம் சுவாமியின் ஜனதாக் கட்சி, ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக் கட்சி ஆகியவை இணைந்து புதியகூட்டணியை உருவாக்கியுள்ளன. இக்கட்சிகள் தமிழகத்தில் 31 தொகுதிகளில் போட்டியிடப் போகின்றனவாம்.
கடந்த சட்டசபைத் தேர்தலின்போது உதயமான ஜாதிக்கட்சிதான் புதிய நீதிக் கட்சி. இந்தக் கட்சியும்,தொண்டர்களும், தலைவர்களும் அதிகம் இல்லாத சுப்பிரமணியம் சுவாமியின் ஜனதாக் கட்சியும் இணைந்து புதியகூட்டணி அமைத்துள்ளன.
புதிய நீதிக் கட்சியின் தலைமைக் கழக அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் இதற்கான அறிவிப்பை சுவாமியும்,ஏ.சி.சண்முகமும் வெளியிட்டனர். பின்னர் புதிய நீதிக் கட்சியின் தேர்தல் அறிக்கையை சுவாமி வெளியிட்டார்.
ஏ.சி.சண்முகம் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜனதாக் கட்சியின் ஏர் உழவன் சின்னத்தில் 31 தொகுதிகளில்எங்களது கூட்டணி போட்டியிடுகிறது. சுவாமி மதுரையில் போட்டியிடுகிறார். அவரை பொது வேட்பாளராகஅறிவிக்க அனைத்துக் கட்சிகளும் முன்வர வேண்டும்.
முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோர் பிரசாரத்தைத் தொடங்கிய சென்னை கடற்கரைகுடிசை மாற்று வாரிய அலுவலகம் முன்பிருந்து எனது பிரசாரத்தை ஏப்ரல் 7ம் தேதி தொடங்குகிறேன் என்றார்ஏ.சி.சண்முகம்.
பின்னர் சுவாமி பேசுகையில், தமிழகத்தில் மட்டுமல்லாது, ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களிலும் ஜனதாக்கட்சி போட்டியிடுகிறது. 15க்கும் மேற்பட்ட எம்.பி தொகுதிகளை வெல்வோம். எங்களது தயவு இல்லாமல் யாரும்ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலையை ஏற்படுத்துவோம்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு இந்தியக் குடியுரிமை கொடுக்கப்பட்டிருந்தாலும் அதை ரத்து செய்யமுடியும். அவரால் இந்தியாவின் பிரதமராக முடியாது. அவரது குழந்தைகள் ராகுல், பிரியங்காவும் 1992ம்ஆண்டு இத்தாலி நாட்டு குடியுரிமை பெற்றுள்ளனர்.
காங்கிரஸ் கட்சிக்கு 100 இடங்கள் கூட கிடைக்காது, அதேபோல, பா.ஜ.க.வுக்கு 150 தொகுதிகளுக்கு மேல்கிடைக்காது என்றார் சுவாமி.
திமுக, அதிமுக கூட்டணி தவிர மக்கள் கூட்டணி என்ற பெயரில் தலித் கட்சிகள் இணைந்த கூட்டணி உள்ளது. இந்நிலையில் ஓட்டு வங்கியே இல்லாத சுவாமியும், ஏ.சி.சண்முகமும் இணைந்து புதிய கூட்டணியை ஏற்படுத்தியுள்ளதுகுறிப்பிடத்தக்கது.
-
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications