கேட்காமலேயே கிடைத்த ரஜினி ஆதரவு: பா.ஜ.க
சென்னை:
நடிகர் ரஜினிகாந்த்தின் ஆதரவை பாரதிய ஜனதாக் கட்சி கேட்கவில்லை. அவர்களாகவே ஆதரவுதெரிவித்துள்ளனர். அதற்காக ரஜினியையும், அவரது ரசிகர்களையும் பாராட்டுகிறேன் என்று பா.ஜ.க. தலைவர்வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
இன்று சென்னை வந்த நாயுடு செய்தியாளர்களிடம் பேசுகையில், பாரதிய ஜனதாக் கூட்டணிக்கு 6 தொகுதிகளில்ரஜினி ரசிகர்கள் ஆதரவு அளிக்க டிவு செய்துள்ளனர். இதற்காக அவர்களை நான் பாராட்டுகிறேன். இருப்பினும்பாஜக யாருடைய ஆதரவையும் இதுவரை கோரவில்லை. அவர்களாகவே ஆதரவு அளித்துள்ளார்கள். இதுபாராட்டுக்குரியது.
முரசொலி மாறன் மறைந்த பிறகு, சென்னை வந்து நான் கருணாநிதியை சந்தித்தபோது, தயாநிதி மாறனைஅமைச்சராக்குவது தொடர்பாக கட்சியினருடன் விவாதித்து தெரிவிப்பதாக என்னிடம் கருணாநிதி கூறினார்.
ஆனால், பிரதமருடன் அவர் என்ன பேசினார் என்பது குறித்து எனக்குத் தெரியாது.
இந்தியாவின் பிரதமர் யார் என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள். வெளிநாட்டுக்காரர் வேண்டுமா, இந்தியர்வேண்டுமா என்பதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றார் வெங்கையா.
இதற்கு முன்னதாக மதிமுக மாநில சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் நரசிம்மன், இசையமைப்பாளர் ஆதித்யன்,விவசாய அணிச் செயலாளர் நாகராஜ் உட்பட பலர் வெங்கைய்யா நாயுடு முன்னிலையில் பா.ஜ.கவில் சேர்ந்தனர்.சென்னை லப்பை ஜமாத் தலைவர் இஸ்மாயில் தலைமையில் 100க்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் பா.ஜ.க.தலைமையகமான கமலாலயத்துக்கு வந்து தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.
-
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில்












Click it and Unblock the Notifications