ஐஎஸ்டி, எஸ்டிடி கட்டணங்கள் 25% குறைப்பு
டெல்லி:
வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நீண்ட தூர தொலைபேசி அழைப்புகளுக்கான கட்டணத்தை பி.எஸ்.என்.எல்.நிறுவனம் 25 சதவீதம் குறைத்துள்ளது. இந்த புதிய கட்டண விகிதம் வரும் 10ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இதன்படி, உள்நாட்டில் 200 கிலோமீட்டருக்கு அதிகமான தூரமுடைய இடங்களுக்கு பேசப்படும் தொலைபேசிஅழைப்புகளின் கட்டணம் நிமிடத்துக்கு ரூ.3.60 ஆக இருக்கும். இதற்கு முன்பு நிமிடத்துக்கு ரூ.4.80வசூலிக்கப்பட்டு வந்தது.
அமெரிக்கா, கனடா நாடுகளுக்கு நிமிடத்துக்கு ரூ.9.60 ஆக இருந்த தொலைபேசிக் கட்டணம் இனி ரூ.7.20 ஆகவசூலிக்கப்படும். அதே நேரத்தில் இங்கிலாந்துக்கு இப்போது வசூலிக்கப்படும் ரூ.7.20ல் மாற்றமில்லை.
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆப்பிரிக்க நாடுகள், ஐக்கிய அரபு குடியரசு, ஓமன், கத்தார், செளதி அரேபியாஉள்ளிட்ட அரபு நாடுகளுக்கு இதுவரை நிமிடத்துக்கு ரூ.24 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.18 ஆககுறைக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, ஹாங்காங் உள்ளிட்ட தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கான தொலைபேசிக்கட்டணம் 20 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி நிமிடத்துக்கு ரூ.12 ஆக இருந்த கட்டணம் இனி ரூ.9.60ஆக குறையும்.
இந்த புதிய கட்டண விகிதம் வரும் 10ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இத் தகவலை செய்தியாளர்களிடம்தெரிவித்த பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சின்ஹா மேலும் கூறியதாவது:
இந்த கட்டணக் குறைப்பால் பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு ரூ.300 கோடியிலிருந்து ரூ.350 கோடி வரை ஒருவருடத்துக்கு இழப்பு ஏற்படும். இருப்பினும், கட்டணச் சலுகைகளால் பொதுமக்களின் தொலைபேசி பயன்பாடுஅதிகரிக்கும் என்பதால் இந்த இழப்பு ஈடுகட்டப்படும் என்று நம்புகிறோம்.
புனித யாத்திரை மேற்கொள்ளும் மத்திய தர குடும்பங்களுக்காக ஒரு புதிய தொலைபேசி அட்டையை வரும் 5தேதி முதல் அறிமுகப்படுத்த இருக்கிறோம். யாத்திரீகர் அட்டை என்று பெயரிடப்படும் இந்த அட்டைகள் ரூ.100மற்றும் ரூ.200 ஆகிய விலைகளில் அனைத்து புனித தலங்களிலும் கிடைக்கும்.
30 நாட்கள் வரை இந்த அட்டைகளைப் பயன்படுத்தி பேசலாம். மேலும் இதன் மூலம் பேசப்படும் உள்ளூர்,எஸ்டிடி மற்றும் ஐஎஸ்டி அழைப்புகளுக்கு 10 சதவீத கட்டணக் குறைப்பு செய்யப்படும் என்றார்.
-
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications