வாக்காளர்கள் எண்ணிக்கை: 5வது இடத்தில் தமிழகம்
டெல்லி:
தேசிய அளவில் வாக்காளர் எண்ணிக்கையில் உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், ஆந்திரா, பீகார் மாநிலங்களுக்குஅடுத்த நிலையில் தமிழகம் உள்ளது.
வரவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் 66.66 கோடி பேர் இடம் பெற்றுள்ளனர்.நாட்டிலேயே அதிகமான வாக்காளர்கள் இருப்பது உத்தரப் பிரதேசத்தில் தான். இங்கு 10.83 கோடி வாக்காளர்கள்உள்ளனர். இங்கு 80 மக்களவைத் தொகுதிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டிலேயே மிகக் குறைவாக லட்சத் தீவுகளில் 39,000 வாக்காளர்கள் தான் உள்ளனர்.
வாக்காளர் எண்ணிக்கையில் தமிழகத்துக்கு 5வது இடம் கிடைத்துள்ளது. மாநில வாரியாக வாக்காளர்களின்எண்ணிக்கை வருமாறு:
உத்தரப் பிரதேசம்-: 10,83,57,691
மகாராஷ்டிரம்:- 6,27,43,047
ஆந்திரா-: 5,10,30,033
பீகார்-: 5,05,65,072
தமிழ்நாடு:- 4,71,07,178
மத்திய பிரதேசம்-: 3,77,67,295
கர்நாடகம்-: 3,76,75,158
குஜராத்-: 3,36,08,412
ஒரிஸ்ஸா:- 2,55,8,0736
கேரளம்:- 2,23,18,864
பஞ்சாப்:- 1,66,12,344
ஜார்க்கண்ட்-: 1,62,33,841
அஸ்ஸாம்-: 1,5,014,316
டெல்லி-: 84,48,760
காஷ்மீர்- : 63,76,872
உத்தராஞ்சல்:- 55,17,889
இமாச்சலப் பிரதேசம்: -41,73,049
மணிப்பூர்-: 15,36,508
நாகாலாந்து:- 10,41,745
கோவா-: 9,32,439
புதுவை-: 6,36,287
அருணாசலபிரதேசம்: 6,24,822
மிஜோரம்:- 5,49,945
சிக்கிம்-: 2,79,822
அந்தமான் நிகோபார் தீவுகள் : 2,41,451
தாத்ரா நகர்ஹவேலி: 1,22,681
லட்சத் தீவுகள்-: 39,033












Click it and Unblock the Notifications