காத்திருந்து .. காத்திருந்து.. காங்கிரஸ் சோகம்!!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இன்று வரும், இரவு வரும், நாளை வரும், நாளை மறுநாளாவது கட்டாயம் வரும் என்று வேட்பாளர்பட்டியலுக்காக காத்திருந்து, காத்திருந்து வெறுத்துப் போயுள்ளனர் தமிழக காங்கிரஸார்.

இருந்தாலும் தமிழக காங்கிரஸுக்கு இப்படி ஒரு சோதனை வரக் கூடாது. அத்தனை அரசியல் கட்சிகளும் தேர்தல்பிரசாரத்தில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கையில் தமிழக காங்கிரஸ் மட்டும் "கம்"மென்று இருக்கிறது."கையைக்" காணாமல் மக்கள் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பல்வேறு குழப்பங்கள், விவாதங்கள், சர்ச்சைகளுக்குப் பிறகு ஒரு வழியாக, ஜி.கே.வாசனின் ஆதரவாளர்களுக்குஓரளவுக்கு சீட் கொடுப்பதாக கட்சி மேலிடம் வாக்களித்துள்ளதாக செய்திகள் வெளியானதும் பட்டியல் வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இதுவரை வேட்பாளர் பட்டியல் குறித்து ஒரு தகவலும் இல்லை. 8 தொகுதிகளில் 2 தொகுதிகள் குறித்துஇன்னும்இழுபறி நீடிப்பதாகவும் ஒரு தகவல் உள்ளது. ராசிபுரத்தில் ராணி, பழனியில் கார்வேந்தன் என வாசன்ஆதரவாளர்களுக்கு சீட் உறுதியாகியுள்ளது. ஆனால் திருநெல்வேலி, சேலம் தொடர்பாக தொடர்ந்து குழப்பம்நிலவுகிறதாம்.

திருநெல்வேலியை தனுஷ்கோடி ஆதித்தனுக்கும், சேலத்தை முன்னாள் எம்.பி கிருஷ்ணசாமிக்கும் கொடுக்குமாறுசோனியாவிடம் வாசன் வலியுறுத்தியுள்ளார். ஆனால் சேலம் தந்தால்தான் டெல்லியை விட்டு நகருவேன் என்றுதங்கபாலு சோனியாவிடம் உறுதியாக தெரிவித்து விட்டார்.

அதேபோல, வசந்தகுமார் தரப்பும் நெல்லையைப் பெறுவதில் உறுதியாக இருந்து வருகிறது. இப்படி தொகுதிக்கு 4,5 கோஷ்டிகள் தரும் நெருக்கடியால் பட்டியலை வெளியிட்டால் அதிருப்தி வெடிக்குமே என்ற பயத்தில்இருக்கிறது காங்கிரஸ் தலைமை.

இறுதியில், ஒரு முடிவெடுத்து, பட்டியலை எப்போது வெளியிட்டாலும் கொடும்பாவி எரிப்பு, போஸ்டருக்குசெருப்படி, சட்டை கிழிப்பு என கலாட்டாக்களுக்கு பஞ்சமே இருக்காது. அந்த இனிய நாளை ஆவலுடன்எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் அதிமுகவினரும் பா.ஜ.கவினரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+