பா.ஜ.க. வேட்பாளருக்கு ஜால்ரா: புதுவை தேர்தல் அதிகாரி அதிரடி இடமாற்றம்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி பா.ஜ.க. வேட்பாளர் லலிதா குமாரமங்கலத்தை அதிகாரிகளுக்கு அறிமுகம் செய்து வைத்த சர்ச்சைகாரணமாக, அம் மாநில தேர்தல் அதிகாரி ஜேசன் சாமியை தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்திஅதிரடியாக இடமாற்றம் செய்துள்ளார்.
சில நாட்களுக்கு முன் புதுவை துணை நிலை ஆளுநர் என்.என்.ஜா அரசு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதில்புதுவை பாஜக வேட்பாளர் லலிதா குமாரமங்கலமும் கலந்து கொண்டார்.
அப்போது விருந்துக்கு வந்திருந்த அதிகாரிகளிடம், லலிதா குமாரமங்கலத்தை ஆளுநரின் செயலாளரும், மாநிலதலைமைத் தேர்தல் அதிகாரியுமான ஜேசன் சாமி அறிமுகம் செய்து வைத்தார்.
மேலும் தான் ஒரு தேர்தல் அதிகாரி என்பதை மறந்துவிட்டு பா.ஜ.க. வேட்பாளரிடம் அதீதமானபவ்யம் காட்டினார். ஆளுநர் என்.என். ஜா, பா.ஜ.வைச் சேர்ந்தவர் என்பதால் அவரிடம் நல்லபெயர் வாங்குவதற்காக பா.ஜ.க. வேட்பாளர் லலிதாவுக்கு ஓவராக ஜால்ரா போட்டார்.
இந்த விவகாரம் பாண்டிச்சேரியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க. வேட்பாளரை அரசுவிருந்துக்கு அழைத்த ஆளுநர் ஜாவை உடனடியாக மாற்ற வேண்டும், அவர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிவிட்டார் என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பிரச்சினையைக் கிளப்பியுள்ளன.
இந் நிலையில் ஆளுநருடன் சேர்ந்து கொண்டு அம் மாநில பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் அதிகாரிஜேசன் சாமியும் செயல்படுகிறார் என்றும் தேர்தல் கமிஷனுக்கு புகார்கள் பறந்தன.
இதையடுத்து விசாரணை நடத்தி தலைமைத் தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, விதியை மீறி நடந்த ஜேசன்சாமியை அதிரடியாக இடமாற்றம் செய்துள்ளார். அவருக்குப் பதில் புதுவை மாநில கல்வித்துறைச் செயலாளர்சத்யவதியை புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக நியமித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கோரிக்கை:
இந் நிலையில் விதிமுறைகளை மீறி பா.ஜ.க. வேட்பாளர் லலலிதா குமாரமங்கலத்தை அரசு விருந்துக்கு அழைத்துஅதிகாரிகளுக்கு அறிகப்படுத்திய புதுவை துணை நிலை ஆளுநர் என்.என். ஜாவை மாற்ற வேண்டும் என்றுமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கோரிக்கை விடுத்துள்ளது.
ஆளுநரோடு சேர்த்து மாவட்ட ஆட்சித் தலைவர், காவல்துறைக் கண்காணிப்பாளர் ஆகியோரையும் உடனடியாகஇடமாற்றம் செய்ய வேண்டும் என்று அக் கட்சியின் மாநிலச் செயலாளர் முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
அதிகாலை 7 மணிக்குள் கள ஆய்வு பண்ணுங்க.. விஜய் அசத்தல்! மாநகராட்சி ஆணையர்களுக்கு அரசு உத்தரவு -
விஜய் தலைமையில் நாளை முதல் அமைச்சரவை கூட்டம்.. ரெடியாகும் ஃபைல்ஸ்.. எடுக்கப்படும் முக்கிய முடிவு? -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ












Click it and Unblock the Notifications