டெல்லியில் அவசரமாய் தரையிறங்கிய துபாய் விமானம்
டெல்லி:
கல்ஃப் ஏர் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானத்தின் ஒரு என்ஜின் திடீரென செயல்படாமல்போனதால் டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை அந்த விமானம் மிக அவசரமாகத்தரையிறங்கியது.
இன்று காலை 7.51 மணிக்கு டெல்லியில் இருந்து 246 பயணிகளுடன் மஸ்கட்டுக்கு இந்த ஜி.ஏ- 133விமானம் கிளம்பியது. கிளம்பிய சிறிது நேரத்திலேயே அதன் ஒரு என்ஜின் செயல் இழந்தது.
இதையடுத்து விமானி டெல்லிக்கே விமானத்தைத் திருப்பினார். இந்திரா காந்தி சர்வதேச விமானநிலையத்தில் அவரசமாகத் தரையிறங்கப் போவதாக விமானி தகவல் அனுப்பினார். இதைத்தொடர்ந்து எமர்ஜென்சி லேண்டிங்குக்கான தயார் நிலைக்கு டெல்லி விமான நிலையம் தயாரானது.
தீயணைப்பு வண்டிகள், ஆம்புலன்ஸ்கள் விமான ஓடுபாதையின் அருகே குவிக்கப்பட்டன.இருப்பினும் எந்தவித ஆபத்தும் இன்றி அந்த விமானம் 8.15 மணிக்குப் பத்திரமாகத்தரையிறங்கியது.
இதையடுத்து அதில் இருந்த 246 பயணிகளும், சிப்பந்திகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.












Click it and Unblock the Notifications