சோனியா: தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சோனியா காந்தியை வெளிநாட்டவர் என்று விமர்சிப்பதற்குத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுதொடர்பாக பதில் அளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்னையைச் சேர்ந்த ஜான்சன் என்ற வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனுவில்,சோனியா காந்தி இந்தியர்தான் என்று உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது. இந் நிலையில் பாஜக, அதிமுகதலைவர்கள் சோனியாவை வெளிநாட்டவர் என்று கூறி பிரசாரம் செய்து வருகின்றனர்.

இது உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் வகையிலும், ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைக்கும் வகையிலும்உள்ளது. எனவே சோனியாவை வெளிநாட்டவர் என்று விமர்சிக்கத் தடை விதிக்கக் வேண்டும் என்றுகோரியுள்ளார் ஜான்சன்.

மனுவை இன்று விசாரித்த தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி தணிகாச்சலம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச்,இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். வழக்கைவரும் திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+