எந்தக் கட்சிக்கும் ஆதரவில்லை: கமல் விளக்கம்
சென்னை:
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்த அரசியல் கட்சியையும் ஆதரிக்கவில்லை என நடிகர் கமல்ஹாசன்அறிவித்துள்ளார். ரசிகர்கள் தாங்கள் விரும்பும் யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கலாம் என்று கமல்ஹாசன்கூறியுள்ளார்.
நடிகர் ரஜினி ஒரு வழியாக தட்டுத்தடுமாறி அரசியலில் குறுக்கு வழியில் குதித்துள்ளார். டாக்டர் ராமதாஸை பழிதீர்ப்பதற்காக பாமக போட்டியிடும் 6 தொகுதிகளில் மட்டும் பாஜக, அதிமுகவை ஆதப்பதாக அவர்தெரிவித்துள்ளார்.
அதேபோல, சண்டியர் படத்திற்குப் பிரச்சனையை உருவாக்கிய டாக்டர் கிருஷ்ணசாமிக்கு எதிராக கமல் ரசிகர்கள்அணி திரளுவதாகவும், அதற்கு கமல் பச்சைக் கொடி காட்டி விட்டதாகவும், ரஜினி ரசிகர்களுடன் இணைந்து கமல்ரசிகர்களும் செயலப்படப் போவதாகவும் செய்திகள் வெளியாகின.
இதை மறுத்துள்ள கமல் தனது ரசிகர் மன்றத் தலைவர் ர. குணசீலன் மூலம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்கூறப்பட்டுள்ளதாவது:
நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் தனது பெயரும், நற்பணி மன்றத்தின் பெயரும் தேவையில்லாமல்அலசப்படுவதை எண்ணி கமல்ஹாசன் வேதனை அடைந்துள்ளார்.
கலைப்பணி, சமூகப் பணி ஆகியவை மட்டுமே கமல்ஹாசனின் கொள்கையாகும். எப்போதும், எந்தக்காரணத்திற்காகவும் அரசியலில் ஈடுபடுவதில்லை என்பதை பல முறை அவரே தெளிவுபடுத்தியுள்ளார்.
அரசியல் மாற்றங்களினாலோ அல்லது அவ்வப்போது வந்து போகும் தேர்தல்களாலோ நமது சமூகப் பணிகள்எந்தக் காலத்திலும் பாதிக்கப்படக் கூடாது.
ரசிகர்கள் குறிப்பிட்ட அரசியல் கட்சிகளையோ, வேட்பாளர்களையோ, கட்சிகளையோ ஆதரிக்க வேண்டும்என்று கமல் ஒருபோதும் கூறியது கிடையாது. ஒரு இந்தியப் பிரஜையாக தேர்தல்களின்போது தவறாமல்வாக்களிக்க வேண்டும் என்பது மட்டுமே ரசிகர்களுக்கு கமலின் அறிவுரை.
அவரவர் விருப்பப்படி, தாங்கள் விரும்பும் கட்சிக்கு, ரசிகர்கள் கட்டாயம் ஓட்டுப்போட வேண்டும் என்று தான்கமல்ஹாசன் வற்புறுத்தி வந்துள்ளார். இந்தத் தேர்தலிலும் அதுதான் அவரது கருத்து.
எனவே, ரசிகர் நற்பணி மன்றத்தின் பெயரிலோ அல்லது கமல்ஹாசனின் பெயரைப் பயன்படுத்தியோ யாரும்தேர்தல் வேலைகளில் ஈடுபடக் கூடாது. மீறி செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு குணசீலலின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்












Click it and Unblock the Notifications