ரஜினி: கருணாநிதியின் அறிவுரையால் அடக்கி வாசிக்கும் ராமதாஸ்
சென்னை:
ரஜினிகாந்த்தின் எதிர்ப்பு ஆதரவு மற்றும் அவரது ரசிகர் மன்ற செயல்பாடுகள் குறித்து தேர்தல் முடியும் வரைபொறுமை காக்குமாறு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு திமுக தலைவர் கருணாநிதி அறிவுறுத்தியுள்ளதாகத்தெரிகிறது.
பாமகவின் பாபா போராட்டத்தால் கொந்தளித்துப் போயிருந்த ரஜினி ரசிகர்களுக்கு இப்போது பழிவாங்க நல்லவாய்ப்பு உருவாகியுள்ளது. இதை உணர்ந்த ரஜினிகாந்த்தும், ரசிகர்களுக்கு பச்சைக் கொடி காட்டி விட்டார்.
பாமக போட்டியிடும் 6 தொகுதிகளையும் சேர்ந்த ரஜினி ரசிகர்கள் அக் கட்சிக்கு எதிராக படையெடுத்துவருகிறார்கள். இதுமட்டுல்லாது, மாநிலம் முழுவதிலும் உள்ள ரசிகர்களும் 6 தொகுதிகளுக்கும் சென்று பிரசாரம்செய்யவும் ரஜினி உத்தரவிட்டுள்ளார்.
ரஜினி ரசிகர்களின் இந்தப் போக்கால் கடுப்படைந்துள்ள ராமதாஸ், சமீபத்தில் திமுக தலைவர் கருணாநிதியைசந்தித்து ஆலோசனை நடத்தினார். ரஜினியுடன் ஏதாவது பேசிப் பார்க்க முடியுமா என்று கருணாநிதியிடம் ராமதாஸ்கேட்டதாகவும் தெரிகிறது.
ஆனால், இப்போதைக்கு ரஜினியிடம் பேச விரும்பவில்லை என்று கூறிவிட்ட கருணாநிதி, இப்போதைக்கு இந்தப்பிரச்சினை குறித்து கவலைப்பட வேண்டாம். மிகவும் பொறுமையாக இருங்கள், ரஜினியைப் பற்றியோ, அவரதுரசிகர்களைப் பற்றியோ கோபத்தைத் தூண்டும் வகையில் எதையும் பேசி விடாதீர்கள்.
பொறுமையாகத்தான் இதை கையாள வேண்டும். எனக்குமே ரஜினியின் போக்கு புரியவில்லை என்றுகூறியுள்ளார்.
இதை ஏற்றுக் கொண்ட ராமதாஸ் இப்போது ரஜினி குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு மிக மிகநிதானமாக, கெளவரமான சொற்களால் பதில் அளிக்க ஆரம்பித்துள்ளார். முன்பெல்லாம் ரஜினி பேச்சைஎடுத்தாலே அவன், இவன் என்று ஏக வசனத்தில்தான் ஆரம்பிப்பார் டாக்டர். அது எல்லை மீறி பன்றியில் போய்முடிந்தது.
இப்போது தனது பிரச்சாரக் கூட்டங்களில் கூட ரஜினியின் பெயரையே குறிப்பிடாமல் மிக, மிக நாசூக்காகப்பேசுகிறார் ராமதாஸ். எல்லாம் கருணாநிதி எங்கள் தலைவருக்குக் கற்றுத் தந்த பாடம் என்கிறார்கள் பா.ம.கவினர்.
இதற்கிடையே ரஜினியுடன் பேசி எல்லா பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டுவிட்டன என்று ராமதாசின் மகன் டாக்டர்அன்புமணி விட்டது புருடா என்று ரஜினியின் வலது கரமான சத்யநாராயணா கூறிள்ளார்.
-
விஜய் பயன்படுத்தும் எல்லா வாகனங்களுக்கும் ஒரே எண்கள்.. பின்னணியில் இருக்கும் உருக்கமான காரணம்! -
அடிச்சு ஓட விட்ருவோம் பாரு! அதிமுகவுக்கு ஜம்ப் ஆன காளியம்மாள் யார்? மீனவ பெண்ணின் "வேங்கை மகன்" மூவ் -
நான் கர்ப்பமானதும் விட்டு விலகி விடுவேன்.. போல்டாக பேசிய திரிஷா! இத்தனை சம்பவம் நடந்திருக்கிறதாம்! -
“கொள்கை எதிரியுடன் கூட்டணி… அரசியல் விப*சாரம்”! மனைவியை வெறுப்பேற்ற.. விஜய்க்கு பிஸ்மியின் குத்து போஸ்ட் -
டைவர்ஸ் ஆகாத ஆணோடு ஒரே கலரில் டிரஸ் அணிந்து சென்றால்.. விளாசிய ஆர்த்தி ரவி! அடுத்த பஞ்சாயத்து -
தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை.. உடனே விசாரணை நடத்துங்க! தேசிய மகளிர் ஆணையத்தில் அதிமுக அவசர புகார் -
முதல் குற்றவாளியே செந்தில் பாலாஜி தான்.. கரூர் மேட்டரில் சிறை செல்வது உறுதி.. ஆதவ் அர்ஜுனா ஆவேசம்! -
கேரளாவில் விஜய் அலை.. ஆச்சர்யத்தில் ஆழ்ந்த பினராயி விஜயன்.. அதிர வைத்த சர்வே ரிப்போர்ட்.. ட்விஸ்ட் -
அரசியலுக்கு வர முயன்ற ரஜினியை மிரட்டியதே திமுக தான்.. ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு! -
விஜயால் தான் ரசிகர்கள் கெட்டு போறாங்க.. அஜித்தை பாருங்க, சந்தோசத்தில் ஷாலினி! வெளுத்து வாங்கிய நடிகை -
சிவகார்த்திகேயன் போல சினிமாவில் யாருமே இல்லை! ராதிகா சொன்ன அந்த விஷயம், விஜய்க்கு தான் பதிலடியா! -
திரிஷாவால் விஜய்க்கு ஏற்படப்போகும் பிரச்சனை.. இனி முட்டு கொடுக்க முடியாது! பிரபலம் ஆதங்கம்












Click it and Unblock the Notifications