தெல்கி கைவரிசை: மதுரை, திருச்சியிலும் பல கோடி மதிப்பு போலி முத்திரைத் தாள்கள்
சென்னை:
ரூ. 50,000 கோடி போலி முத்திரைத் தாள் மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள அப்துல் கரீம் தெல்கி,சென்னையில் உள்ள தனது ஏஜென்டுகள் மூலமாக மதுரை, திருச்சியிலும் ஏராளமான போலி முத்திரைத் தாள்களைவினியோகித்திருப்பதாக கர்நாடக போலீஸார் தகவல் கொடுத்துள்ளனர்.
மத்திய அரசின் நாசிக் பணம்-முத்திரைத் தாள் அச்சடிப்பு நிறுவனத்தில் இருந்து கருவிகளை சுட்டு,கோடிக்கணக்கான ரூபாய் போலி முத்திரைத் தாள்களை அச்சடித்து இந்தியா முழுவதும் விற்ற கர்நாடகத்தைச்சேர்ந்த அப்துல் கரீம் தெல்கி கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் மும்பை மற்றும் கர்நாடக சிறப்புப் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெல்கி நடந்த விசாரணையின்போது தமிழகத்திலும் அவர் பெருமளவில் போலி முத்திரைத் தாள்களைவினியோகம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து சென்னையைச் சேர்ந்த ஆண்டாளம்மாள் என்பவர் கைதுசெய்யப்பட்டார்.
ஆண்டாளம்மாள் ஒரு முத்திரைத் தாள் விற்பனையாளர். ஆரம்ப காலத்தில் சிறிய அளவில் போலி முத்திரைத்தாள்களை இவர் விற்று வந்துள்ளார். அவரை தனது தொழிலுக்குப் பயன்படுத்திக் கொண்ட தெல்கி அவர் மூலம்சென்னை நகரில் பெருமளவு போலி முத்திரைத் தாள்களை புழக்கத்தில் விட்டுள்ளார்.
இதேபோல, மேலும் 4 பேரை ஏஜென்டுகளாக அமர்த்திய தெல்கி அவர்கள் மூலம் மதுரை, திருச்சியிலும்பெருமளவுக்கு போலி முத்திரைத் தாள்களை விற்பனை செய்து வந்துள்ளார். இதற்கு போலீசாரும்உடந்தையான இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
தெல்கிக்கும் மதுரை, திருச்சியில் உள்ள போலி முத்திரைத்தாள் விற்பனையாளர்களுக்கும் உள்ள தொடர்பு குறித்துகர்நாடக போலீஸார் இப்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
விஜய்க்கு 25 நாள் ஆச்சு.. முதல் ஒப்பந்தம்.. 3 இடத்தில் 3 மெகா திட்டம்.. L&T நிறுவனம் ரூ.18600 கோடி முதலீடு! -
அதிகாலை 7 மணிக்குள் கள ஆய்வு பண்ணுங்க.. விஜய் அசத்தல்! மாநகராட்சி ஆணையர்களுக்கு அரசு உத்தரவு -
அடித்து ஆடும் விஜய்! லஞ்சம் வாங்குனா காலி! சென்னை மாநகராட்சி நகரமைப்பு அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் -
விஜய் தலைமையில் நாளை முதல் அமைச்சரவை கூட்டம்.. ரெடியாகும் ஃபைல்ஸ்.. எடுக்கப்படும் முக்கிய முடிவு? -
சேலத்துல ஓட்டுக்கு பணம் கொடுத்துதான் ஜெயிச்சாங்க! பஞ்சாயத்தை கிளப்பிய தவெக வேட்பாளர்! விஜய் சொன்னது? -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?











Click it and Unblock the Notifications