திருச்சி: ஓடும் ரயிலில் மாணவர்கள் இடையே அடிதடி, கத்திக்குத்து- மூவர் கைது
திருச்சி:
திருச்சியில் ஓடும் ரயிலில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே அடிதடி ஏற்பட்டது. இதில் ஒருமாணவருக்குக் கத்திக் குத்து விழுந்தது. மேலும் பலர் காயமடைந்தனர். இதையடுத்து 3மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருச்சி கல்லூரியில் படிக்கும் மணப்பாறையைச் சேர்ந்த மாணவர்கள் பலர் ரயிலில் தினமும்திருச்சிக்கு வந்துவிட்டுத் திரும்புகின்றனர்.
அதே போல திருச்சியின் இன்னொரு கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் சிலர் திண்டுக்கல்லில்இருந்து தினமும் இதே ரயிலில் வந்து செல்கின்றனர்.
இந்த இரு மாணவர்களுக்கும் இடையே அடிக்கடி வாய்த் தகராறு ஏற்படுவது வழக்கம். இன்றும்மணப்பாறையை ரயில் தாண்டியதும் வழக்கம்போல பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் பெரிதாகி பி.ஏ. வரலாறு மூன்றாமாண்டு படிக்கும் மணப்பாறையைச் சேர்ந்த செந்தில்என்ற மாணவரை மெளலானா என்ற மாணவர் தாக்கியுள்ளார். அத்தோடு, கத்தியாலும்குத்தியிருக்கிறார். இதில் செந்திலின் முகம் வெட்டுப்பட்டது. இதையடுத்து செந்திலின் முதுகிலும்கத்தியால் குத்தியிருக்கிறார் மெளலானா.
அதைத் தடுக்க முனைந்த எட்வின் ராஜ் என்பவருக்கும் கத்திக் குத்து விழுந்தது. மெளலானாவின்நண்பர்கள் இணைந்து எட்வினையும் செந்திலையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
இதையடுத்து ரயில்வே பாதுகாப்புப் படையினர் விரைந்து வந்து இரு தரப்பினரையும்பிரித்துவிட்டனர். காயமடைந்த செந்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கத்திக் குத்து மற்றும் கலாட்டாவில் ஈடுபட்ட மெளலானா மற்றும் அவரது நண்பர்கள் இரண்டு பேரைபோலீசார் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications