வாஜ்பாயுடன் தமிழக பா.ஜ.க. வேட்பாளர்கள் நாளை சந்திப்பு
சென்னை:
பிரதமர் வாஜ்பாய் நாளை ஆந்திர மாநிலம் செல்லும் வழியில் சென்னை வருகிறார். சென்னை விமானநிலையத்திலேயே தமிழக பா.ஜ.க. வேட்பாளர்கள் 7 பேரையும் அவர் சந்திக்கிறார்.
தேர்தல் சுற்றுப் பயணத்தை ஆரம்பித்துள்ள பிரதமர் வாஜ்பாய் நாளை ஆந்திர மாநிலம் நெல்லூரில் பிரசாரம்செய்யவுள்ளார்.இதற்காக நாளை பிற்பகல் 1.30 மணியளவில் அவர் தனி விமானத்தில் சென்னை வருகிறார்.
சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தில் இருந்து உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் நெல்லூர்புறப்பட்டுச் செல்கிறார். அங்கு தேர்தல் பிரசாரத்தை முடித்து விட்டு மாலை 5.40 மணிக்கு சென்னை திரும்புகிறார்.
அப்போது தமிழக பா.ஜ.க. வேட்பாளர்களைச் சந்தித்து தேர்தல் நிலவரம் குறித்து விவாதிக்கிறார்.
இதன் பின் விமானம் மூலம் மீண்டும் டெல்லி கிளம்புகிறார் வாஜ்பாய்.
ஒரு வேளை சென்னைக்குள் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால், அதற்காக குண்டு துளைக்காதபி.எம்.டபிள்யூ கார் ஒன்று டெல்லியில் இருந்து நேற்றிரவே ராணுவ விமானத்தில் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications