அதிமுகவுக்காக களமிறக்கப்படும் மகளிர் சுய உதவிக் குழுக்கள்
சென்னை:
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ள தொண்டுநிறுவனங்களுடனான ஆலோசனைக் கூட்டத்தை ரத்து செய்யுமாறு தலைமைத் தேர்தல் ஆணையர்டி.எஸ்.கிருஷ்ணமூர்த்திக்கு திமுக கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் வலுவாக காலூன்றியுள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களை அதிமுக தனது தேர்தல் பிரச்சாரத்தில்ஈடுபடுத்தி வருகிறது. உள் கிராமங்கள் வரை அமைக்கப்பட்டுள்ள இக் குழுக்களில் பல்லாயிரக்கணக்கானபெண்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையினர் தலித் சமூகத்தைச் சேர்ந்த கல்வியறிவு பெறவாய்ப்பில்லாத, ஏழைப் பெண்கள்.
இவர்களை மிரட்டியும், கடனுதவி தருவதாகச் சொல்லி ஏமாற்றியும் அதிமுக தனது பிரச்சாரத்துக்காக பயன்படுத்திவருவதாக எதிர்க் கட்சிகள் புகார் கூறியுள்ளன. குறிப்பாக கிராமங்களில் ஊடுருவி இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள்இந்தக் குற்றச்சாட்டை தீவிரமாகவே முன் வைத்துள்ளன.
இந்தக் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் தான் அதிமுகவினரின் செயல்பாடுகளும் உள்ளன. ஜெயலலிதாகலந்து கொள்ளும் பொதுக் கூட்டங்களில் கூட்டம் காட்டுவதற்காகக் கொண்டு வந்து மைதானங்களில் நிரப்பப்படும்மக்களில் பெரும்பான்மையினராக இந்த மகளிர் சுய உதவிக் குழுக்களின் பெண்களே உள்ளனர்.
ஜெயலலிதாவின் கூட்டங்கள் அனைத்திலும் பச்சைப் புடவையுடன் வந்து நிற்க வேண்டும் என மாவட்டநிர்வாகங்கள் உத்தரவிடுகின்றன. அதை அமலாக்கும் பணி அந்தந்த ஒன்றிய, கிளை அதிமுகவினருடையது.
மாவட்ட அதிமுகவிடம் இருந்து இதற்கான டப்பு வந்து சேர்ந்துவிடுகிறது. இதையடுத்து வேன், பஸ், லாரி,ஆட்டோ, டிராக்டர், மாட்டு வண்டி என கிடைத்த வாகனங்களில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் அப்பாவிஉறுப்பினர்களை அள்ளி நிரப்பிக் கொண்டு ஜெயலலிதாவின் கூட்டம் நடக்கும் இடங்களுக்கு வந்துவிடுகின்றனர்அதிமுகவினர்.
கூட்டத்துக்கு வாரவிட்டால் கடன் கிடையாது என்பதில் ஆரம்பித்து பலவிதமான மசிய வைக்கும் வேலைகளையும்அந்தந்தப் பகுதி அதிமுகவினரும் கூடவே சில அதிகாரிகளும் செய்து வருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
மேலும் இக் குழுவினர் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் தலா இரண்டு ஓட்டுக்களை இரட்டை இலைக்கு விழவைத்தாலே, தேர்தலில் வென்றுவிட முடியும் என அதிமுகவினர் கருதுவதாகவும் தெரிகிறது. பூத்துக்குகுறைந்தபட்சம் 200 வாக்குகளை இந்தப் பெண்கள் கொண்டு வந்துவிட்டாலே கரையேற்விட முடியும் எனஅதிமுகவினர் கருதுகின்றனர்.
இதையெல்லாம் எதிர்க் கட்சிகள் கவலையோடு கவனித்துக் கொண்டிக்கும் நிலையில் அடுத்த அதிரடிக்கு அதிமுகதயாராகியுள்ளது.
திடீரென மகளிர் சுய உதவிக் குழுக்களின் செயல்பாடுகளை மேம்படுத்துவது தொடர்பாக தொண்டுநிறுவனங்களுடனான ஆலோசனைக் கூட்டம் என்ற பெயரில் இந்தப் பெண்களை ஒரே இடத்தில் திரட்டும்வேலையில் தமிழக அரசு இறங்கியுள்ளது.
இன்று நடக்கவுள்ள இக் கூட்டத்தில் வைத்து ஒட்டுமொத்தமாக ஏதாவது ஒரு சலுகை அல்லது உதவித் திட்டத்தைஅறிவிக்கும் முடிவில் அரசு இருப்பதாகத் தெரிகிறது. இதற்கு திமுக கடும் எதிர்ப்புப் தெரிவித்துள்ளது.
இது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்திக்கு திமுக அனுப்பியுள்ள புகார் கடித விவரம்:
இக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்தவர்களிடம், அதிமுக கூட்டணிக்குவாக்களிக்குமாறு அரசுத் தரப்பில் நெருக்குதல் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே தேர்தல் நோக்கத்தில் கூட்டப்பட்டுள்ள இந்தக் கூட்டத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்றுகோரப்பட்டுள்ளது.
-
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ











Click it and Unblock the Notifications