நெல்லையை தவிர 7 தொகுதி காங். வேட்பாளர்கள் அறிவிப்பு
டெல்லி:
சர்ச்சையை ஏற்படுத்தி வந்த காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் ஒருவழியாக வெளியாகியுள்ளது. இருப்பினும் திருநெல்வேலிதொகுதியில் தொடர்ந்து சிக்கல் நிலவுவதால் அந்தத் தொகுதியின் வேட்பாளரைத் தவிர மற்ற 7 தொகுதிகளுக்குரியவேட்பாளர்களை மட்டும் காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் திமுக கூட்டணியில் இணைந்து காங்கிரஸ் போட்டியிடுகிறது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள்ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் 10 தொகுதிகளில் 8 தொகுதிகளுக்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்குள்கட்சி மேலிடத்திற்குப் போதும் போதுமென்றாகி விட்டது.
மாநிலத் தலைவர் வாசனின் ஆதரவாளர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று எழுந்த புகாரையடுத்து புதியதேர்வுக் குழு போடப்பட்டு அந்தக் குழுவினருடன் வாசன் கடந்த சில நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார்.அதன் இறுதியில் 7 வேட்பாளர்கள் மட்டும் இறுதி செய்யப்பட்டனர். திருநெல்வேலி தொகுதியில் தொடர்ந்துஇழுபறி நிலவியதால் அத்தொகுதிக்குரிய வேட்பாளரை பின்னர் முடிவு செய்யலாம் என்று கட்சி மேலிடம் முடிவுசெய்தது.
இதையடுத்து காங்கிஸ் பொதுச் செயலாளர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் டெல்லியில் தமிழக காங்கிரஸ் கட்சியின் 7வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை அறிவித்தார். அதன்படி சிவகங்கை-ப.சிதம்பரம், கோபிச் செட்டிப்பாளையம்- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், சேலம்-தங்கபாலு, திண்டுக்கல் - என்.எஸ்.வி.சித்தன், பெரியகுளம் -ஜே.எம்.ஆரூண், ராசிபுரம் - கே.ராணி, பழனி - கார்வேந்தன் போட்டியிடுகின்றனர்.
ஏற்கனவே மயிலாடுதுறை (மணிசங்கர் அய்யர்), நீலகிரி (பிரபு) தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர். நெல்லை மட்டும் தற்போது பாக்கி உள்ளது.
வாசன் திருப்தி:
வேட்பாளர் பட்டியல் குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த வாசன் கூறியதாவது:
வேட்பாளர் பட்டியல் எனக்கு முழு திருப்தி அளிக்கிறது. வரும் 7ம் தேதி காங்கிரஸ் பிரசார தொடக்க விழா மத்தியசென்னையில் நடைபெற உள்ளது. அன்றைய தினம் வேட்பாளர் அனைவரும் அறிமுகப்படுத்தப்படுவார்கள். 9அல்லது 10ம் தேதி முதல் பிரசாரத்தைத் தொடங்கவுள்ளேன் என்றார்.
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications