மதுரை ரசிகர்களின் தபால் பிரசாரம்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

பாண்டிச்சேரி வாக்காளர்களிடம் தபால் அட்டை மூலம் பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவு திரட்டும் முயற்சியில்இறங்கியுள்ளனர் மதுரை மாவட்ட ரஜினி ரசிகர்கள்.

பாமகவுக்கு எதிராக ரஜினி ரசிகர்கள் முழு வீச்சில் களம் இறங்கியுள்ளனர். பாமக போட்டியிடும் 6 தொகுதிகளிலும்அதிமுக, பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக, தமிழகத்தின் பல பகுதிகளிலும் உள்ள ரசிகர்கள், பல்வேறுவழிகளிலும் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை மாவட்ட ரஜினி ரசிகர்கள் புதுமையான முறையில் பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். புதுவையில்போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் லலிதா குமாரமங்கலத்திற்கு வாக்களிக்குமாறு கோரி 1 லட்சம் அஞ்சல்அட்டைகளை அனுப்ப முடிவு செய்துள்ளனர்.

புதுவை தொகுதியில் உள்ள ஒரு லட்சம் வாக்காளர்களுக்கு அஞ்சல் அட்டைகளை அனுப்புவதே ரசிகர்களின்திட்டம். முதல் கட்டமாக தற்போது 10,000 வாக்காளர்களுக்கு அஞ்சல் அட்டைகளை மதுரை ரசிகர்கள் அனுப்பிஉள்ளனர்.

மேலும் புதுவை உள்ளிட்ட பாமக போட்டியிடும் 6 தொகுதிகளிலும் ரத யாத்திரை நடத்துவது என்றும், அதைதொடங்கி வைக்க ரசிகர் மன்றத் தலைவர் சத்யநாராயண ராவை அழைப்பது என்றும் ரசிகர்கள் முடிவுசெய்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+