சென்னையில் வாஜ்பாயுடன் கூட்டு பிரசாரம்: ஜெ.
சென்னை:
ஆந்திர மாநிலம் நெல்லூரில் நடைபெறும் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளும் பொருட்டு,இன்று சென்னை வந்த பிரதமர் வாஜ்பாயை முதல்வர் ஜெயலலிதா விமான நிலையத்தில் வரவேற்றார்.
வாஜ்பாய் சென்னை விமான நிலையத்துக்கு இன்று பிற்பகல் வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு தமிழகபா.ஜ.க சார்பிலும், அதிமுக சார்பிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை முதல்வர் ஜெயலலிதா,மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர், பா.ஜ.க. தலைவர்கள், வேட்பாளர்கள் ஆகியோர் வரவேற்றனர்.
நெல்லூர் செல்லும் முன் நிருபர்களுக்குப் பேட்டியளித்த வாஜ்பாய்,
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளிநாட்டவர் என்பது பிரச்சனைக்குரிய விஷயமாகும். நாடு முழுவதும்இது பற்றிய விவாதம் நடைபெற்று வருகிறது. நாட்டின் முன்னேற்றத்தில்தான் எங்களுக்கு அக்கறை என்றாலும்,இது போன்ற விஷயங்களை ஒதுக்க முடியாது
ஜெயலலிதாவுடன் இணைந்து பிரசாரம் செய்வதில் ஆர்வமாக இருக்கிறேன் என்றார்.
பின்னர் பேசிய ஜெயலலிதா, சேர்ந்து பிரசாரம் செய்வது குறித்து விவாதித்து வருகிறோம். விரைவில் சென்னையில்மிகப் பெரிய பிரசார கூட்டம் நடைபெறும் என்றார்.
பின்னர் தனி ஹெலிகாப்டர் மூலம் வாஜ்பாய் நெல்லூர் புறப்பட்டு சென்றார். நெல்லூரிலிருந்து மாலை 6.05-க்குச்சென்னை வருகிறார்.
மாலை 6.15-க்கு விமானம் மூலம் டெல்லி செல்கிறார். வாஜ்பாய் வருகையையொட்டி சென்னை விமானநிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications