ரஜினி ரசிகர்களுக்கு பா.ஜ.க. வக்காலத்து
சென்னை:
நடிகர் ரஜினியின் ரசிகர்களை பாமகவினர் கடுமையாக தாக்கியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று பா.ஜ.க. அகிலஇந்திய செயலாளர் இல.கணேசன் கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், மதுரையில் அமைதியான முறையில் கருப்புக் கொடி காட்ட யன்ற ரஜினிகாந்த ரசிகர்கள்கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்கள். இது மிக வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
நடிகர் ரஜினிகாந்த் திரைப்படங்களில் வன்முறைக் காட்சிகளில் நடிப்பவர் என்று ராமதாஸ் அடிக்கடி விமர்சித்து வருகிறார்.ஆனால், நிஜ வாழ்க்கையில் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர் பாமகவினர்.
நிஜ வாழ்க்கையில் வன்முறையில் ஈடுபடுபவர்கள், நிழல் வாழ்க்கையை விமர்சனம் செய்வது எந்தளவுக்கு அர்த்தமற்றதுஎன்பதற்கு மதுரை சம்பவமே சாட்சி என்றார் இல.கணேசன்.
முன்னதாக சென்னை மயிலாப்பூர் லஸ் பகுதியில் அதிமுக வேட்பாளர் பதர் சயீதை ஆதரித்து இல.கணேசன் இன்று பிரசாரம்மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,
சோனியா காந்தியை இந்தியாவின் மருமகள் என்று கருணாநிதி கூறுகிறார். வீட்டுக்கு வந்த மருமகளிடம் வீட்டுச் சாவியைக்கொடுப்பது வழக்கம். எல்லாம் சரி. இந்திரா காந்தியின் வீட்டுச் சாவியை சோனியாவிடம் கொடுக்கட்டும், அதை நாங்கள்ஆட்சேபிக்கவில்லை. இந்தியாவை எப்படி சோனியாவிடம் கொடுக்க முடியும்?
இந்தியா இந்தியர்களின் சொத்து, இந்த சொத்தை இத்தாலிக்காரான சோனியாவிடம் எப்படிக் கொடுக்க முடியும்? யார் வீட்டுச்சொத்தை யாரிடம் கொடுப்பது? என்றார்.












Click it and Unblock the Notifications