காங்கிரசில் "கட்டிப்புடி" தொடங்கியது
நாமக்கல்:
ராசிபுரம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராணியின் எதிர்ப்பாளர்களும், அவரது ஆதரவாளர்களும்நடுரோட்டில் அடித்து உருண்டனர்.
பதவிகளைப் பிடிக்கும்போதும், தேர்தல் நேரத்தில் சீட் கேட்கும்போதும் காங்கிரஸான் கோஷ்டிப் பூசல் நியூயார்க்கின் முன்னாள்டுவின் டவர் உயரத்தை விட அதிக அளவில் இருக்கும்.
தற்போதைய நாடாளுமன்றத் தேர்தலிலும் சீட் கேட்பதில் ஏற்பட்டுள்ள தள்ளுமுள்ளு காரணமாக கட்சி மேலிடம் திணறிப்போயுள்ளது. 10 தொகுதிகளில் இதுவரை 9 தொகுதிகளுக்கு மட்டுமே வேட்பாளர்களை அறிவிக்க முடிந்துள்ளது. நெல்லைபாக்கி உள்ளது.
இந் நிலையில் ராசிபுரம் தொகுதி வேட்பாளராக வாசனின் நெருக்குதல் காரணமாக ராணி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தத்தொகுதியை ராசிபுரம் எம்.எல்.ஏ. ஜெயக்குமாரும் கேட்டிருந்தார். முதலில் அவருக்குத்தான் சீட் என்று தகவல் வெளியானது.ஆனால் வாசன் தந்த நெருக்கடி காரணமாக ராணிக்கு சீட் கிடைத்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த ஜெயக்குமாரின் ஆதரவாளர்கள், நாமக்கல் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். நூற்றுக்கும்மேற்பட்டவர்கள் பஸ் நிலையத்திலிருந்து ஊர்வலமாக கிளம்பினர். பின்னர் ராணியின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர்.
இதை அறிந்ததும் ராணியின் ஆதரவாளர்கள் கூடி எதிர் போராட்டம் நடத்தினர். உருவ பொம்மையை எரிக்க விடாமல் தடுத்தனர்.இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
இரு தரப்பினரும் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர். இதில் கதர் வேட்டிகள் கிழிந்தன. கதர் சட்டைகள் நார்நாராகி நாறின.செருப்புகளாலும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர்.
கிட்டத்தட்ட தெலுங்குப் பட ஷூட்டிங் ஸ்பாட் போல அந்த இடம் காணப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து காங்கிரஸாரைசமாதானப்படுத்தி அங்கிருந்து கலையச் செய்தனர்.
இதேபோல, சேலம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தங்கபாலுவுக்கும் காங்கிரஸில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.அவரை எதிர்த்து சுயேச்சை வேட்பாளரை களம் இறக்கப் போவதாக மாவட்ட காங்கிரஸ் தலைவரே கூறி வருகிறார்.












Click it and Unblock the Notifications