தூர்தர்ஷன் பாரபட்சம்: சொல்கிறது திமுக
சென்னை:
சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையம் எதிர் க்கட்சிகளை பாரபட்சத்துடன் நடத்துவதாக திமுக புகார் கூறியுள்ளது.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையருக்கு திமுக அனுப்பியுள்ள கடிதத்தில், அதிமுக மற்றும் பாஜகவுக்கு ஆதரவாக தூர்தர்ஷன்செயல்படுகிறது. எதிர்க் கட்சிகளை சுத்தமாக புறக்கணித்து வருகிறது. இது தேர்தல் நடத்தை விதி மீறலாகும்.
மெட்ரோ ஸ்கேன் என்ற பெயரில் கடந்த ஏப்ரல் 2ம் தேதி ஒளிபரப்பான நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா அரக்கோணத்தில்மேற்கொண்ட தேர்தல் பிரசாரத்தையும், வெங்கையா நாயுடு மேற்கொண்ட பிரசாரத்தையும் காட்டினார்கள்.
மெட்ரோ ஸ்கேன் என்ற நிகழ்ச்சி சென்னையில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்துக் காட்டுவது. ஆனால்அரக்கோணம் எப்போது மெட்ரோ ஆனது என்று தெரியவில்லை. மெட்ரோ ஸ்கேன் என்ற பெயரில் அரக்கோணத்தில்ஜெயலலிதா, வெங்கையா நாயுடுவின் பிரசார நிகழ்ச்சிகளைக் காட்டியுள்ளனர்.
ஆனால் திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகளின் பிரசாரத்தை காட்டாமல் புறக்கணிக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications