"வெட்டுங்கடா என உத்தரவிட்டார் ராமதாஸ்.. ரஜினி ரசிகர்கள் புகார்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

இவர்களை வெட்டித் தள்ளுங்கடா, கொல்லுங்கடா என்று டாக்டர் ராமதாஸ், கூறிய பிறகே பாமக தொண்டர்கள் தங்கள் மீதுகொலை வெறித் தாக்குதல் திடத்தியதாக ரஜினி ரசிகர்கள் போலீஸில் கொடுத்துள்ள புகாரில் தெரிவித்துள்ளனர்.

மதுரையில் போலீஸ் உதவி மற்றும் பாதுகாப்புடன் ரஜினி ரசிகர்கள், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கு கருப்புக் கொடிகாட்டினர். இதனால் கடுப்பான பாமக தொண்டர்கள் ரஜினி ரசிகர்களைத் தாக்கினர்.

சரமாரியாகத் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்த ரஜினி ரசிகர்கள் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில்ராமதாஸ் உள்ளிட்ட 26 பேர் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை விளக்குத்தூண் காவல் நிலையத்தில் ரசிகர்கள் கொடுத்துள்ள புகாரின் முழு விவரம்:

ரஜினி ரசிகர்கள் 100 பேர் ராமதாஸுக்குக் கருப்புக் கொடி காட்ட முடிவு செய்து நெல்பேட்டை அண்ணா சிலை அருகேசாலையோரத்தில் நின்றிருந்தோம்.

ராமதாஸ் கார் வந்தபோது அமைதியான முறையில் கருப்புக் கொடிகளை காட்டினோம். எங்களைப் பார்த்ததும் காருக்குள் இருந்தராமதாஸ் ஆத்திரமடைந்தார். தனது காருக்குப் பின்புறம் வந்த கார்களில் இருந்தவர்களைப் பார்த்து, டேய், இவங்களைவெட்டுங்கடா, கொல்லுங்கடா என்று பலத்த குரலில் உத்தரவிட்டார்.

இதையடுத்து அந்தக் கார்களில் இருந்தவர்கள் திமுதிமுவென கீழே இறங்கி எங்களை நோக்கி ஓடி வந்து கையில் இருந்தஅரிவாள்கள், இரும்புக் கம்பிகள், உருட்டுக் கட்டைகளால் தாக்கத் தொடங்கினர்.

நிராயுதபாணியாக இருந்த நாங்கள் உயிர் தப்பி ஓடினோம். ஆனாலும் விரட்டி விரட்டி எங்களை பா.ம.கவினர் தாக்கினர்.ராமதாசின் தூண்டுதலின் பேரில்தான் இந்த தாக்குதல் நடந்தது என்று கூறியுள்ளனர்.

பதிவான வழக்குகள்:

இதன் அடிப்படையில் ராமதாஸ் மீதும் மற்றவர்கள் மீதும், 5 பேருக்கு மேல் சட்ட விரோதமாக கூடுதல், ஆயுதங்களால் தாக்குதல்,காயம் விளைவித்தல், கொலை முயற்சி செய்தல், கூட்டமாக தாக்குதல் நடத்துதல், சட்டத்திற் புபுறம்பாக கூடுதல் என சகலபிரிவுகளின் கூழும் போலீஸார் பா.ம.கவினர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+