சென்னையில் ஜெயலலிதா இன்று மீண்டும் பிரசாரம்
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா இன்று சென்னை நகரில் மீண்டும் பிரசாரம் மேற்கொள்கிறார்.
அதிமுக வேட்பாளர்களான பதர் சயீத், பாலகங்கா ஆகியோருக்காக தென் சென்னை மற்றும் மத்திய சென்னை தொகுதிக்குட்பட்டபல்வேறு பகுதிகளில் அவர் பிரசாரம் செய்கிறார்.
மாலை தி.நகர் வெங்கட்நாராயணா சாலையிலிருந்து பிரசாரத்தைத் தொடங்கும் ஜெயலலிதா, நியூ போக் சாலை, முத்தரங்கன்சாலை சந்திப்பில் பேசுகிறார். பின்னர் குமரன் காலனி, கோடம்பாக்கம் சாலை வழியாக ஐந்து விளக்குக்கு வருகிறார். அங்கும்பேசுகிறார்.
பின்னர் விஜிபி சாலை, பெருமாள் கோவில் மேற்கு மாட வீதி, ஜோன்ஸ் சாலை, கங்கையம்மன் கோவில் தெரு சந்திப்பு, ஏரிக்கரைசாலை, ராகவன் காலனி 1வது தெரு மற்றும் 12வது அவென்யூ, ஆரிய கெளடா சாலை வழியாக அயோத்தி மண்டபம் வரும்முதல்வர் அங்கு பிரசாரக் கூட்டத்தில் பேசுகிறார்.
பின்னர் அசோக் நகர், எம்.எம்.டி.ஏ. காலனி, டி.பி.சத்திரம், சேத்துப்பட்டு ஆகிய இடங்களிலும் பேசுகிறார். இறுதியாகநுங்கம்பாக்கம் வில்லேஜ் சாலை சுதந்திர தினப் பூங்காவில் பேசுவதோடு இன்றைய பிரசாரத்தை முடித்துக் கொள்கிறார்.












Click it and Unblock the Notifications