தமிழகத்தை தமிழ் மகன்தான் ஆள வேண்டும்: கருணாநிதி
சென்னை:
தமிழகத்தை தமிழ் அறிந்த தமிழ் மகன்தான் ஆள வேண்டும் என்று பாவேந்தர் பாரதிதாசன் கூறியிருப்பதை ஜெயலலிதாநினைவில் கொள்ள வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களான ப.சிதம்பரம், என்.எஸ்.வி.சித்தன், தங்கபாலு ஆகியோர் இன்று கோபாலபுரம் சென்றுகருணாநிதியை சந்தித்தனர்.
பின்னர் கருணாநிதி செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியாவை இந்தியர்கள்தான ஆள வேண்டும், மற்றவர்கள் வெளியேறவேண்டும் என்று ஜெயலலிதா கூறி வருகிறார். பாவேந்தர் பாரதிதாசன் தனது பாடலில் தமிழ் அறிந்த தமிழ் மகன்தான் தமிழகத்தைஆள வேண்டும் என்று கூறியுள்ளதை ஜெயலலிதாவுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஐந்தரை ஆண்டு கால ஆட்சியில் மக்களிடம் சொல்லிக் கொள்ளும்படி ஒரு சாதனையும்இல்லை. அதனால்தான் சோனியா காந்தி வெளிநாட்டவர் என்று கூறி பாஜகவினர் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதை மக்கள்ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றார்.
தமிழ்நாட்டை தமிழ் மகன் தான் ஆள வேண்டும் என்ற கருத்தை ஜெயலலிதாவோடு ரஜினிக்கும் சேர்த்தே கருணாநிதிகூறியிருப்பதாகக் கருதப்படுகிறது.
-
அடித்து ஆடும் விஜய்! லஞ்சம் வாங்குனா காலி! சென்னை மாநகராட்சி நகரமைப்பு அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் -
விஜய் தலைமையில் நாளை முதல் அமைச்சரவை கூட்டம்.. ரெடியாகும் ஃபைல்ஸ்.. எடுக்கப்படும் முக்கிய முடிவு? -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்












Click it and Unblock the Notifications