ஜெயலலிதாவுக்கு பயம் வந்துவிட்டது: ப.சிதம்பரம்
சென்னை:
பா.ஜ.க.-அதிமுக கூட்டணி மிக அபாயகரமானது என காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையின் தலைவரும்சிவகங்கையில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடவுள்ளவருமான ப.சிதம்பரம் கூறினார்.
இந்த இரு கட்சிகளுமே நாட்டுக்கும் மக்களுக்கும் எதிரானவை என்றார்.
சென்னையில் இன்று நிருபர்களைச் சந்தித்த சிதம்பரம் கூறியதாவது:
டெல்லியில் ஆட்சியில் உள்ள பா.ஜ.க. நாட்டின் மத சகிப்புத்தன்மைக்கும், கலாச்சார ஒற்றுமைக்கும் எதிராகசெயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் அதிமுக மனித உரிமைகளை அடியோடு நசுக்கிவருகிறது.
இப்படிப்பட்ட இந்த அபாயகரமான இரு கட்சிகளும் கூட்டு சேர்ந்துள்ளது மாபெரும் ஆபத்துக்கு கட்டியம்கூறுவதாகவே அமைந்துள்ளது.
சோனியாவை வெளிநாட்டுக்காரர் என்று விமர்சிக்கும் அளவுக்கு பா.ஜ.கவும் அதிமுகவும் தரம்தாழ்ந்துபோய்விட்டன. ஜனநாயகத்தில் எந்த அளவுக்கு கீழிறங்கி விமர்சனம் செய்ய முடியும் என்பதற்கு இது நல்லஉதாரணம்.
நாட்டில் வறுமை அப்படியே இருக்கிறது.. வேலை வாய்ப்புகள் இல்லை. இதையெல்லாம் பற்றிப் பேசுவதையும்அதற்கு பரிகாரம் தேடுவதையும் விட்டுவிட்டு வாஜ்பாயும், அத்வானியும், ஜெயலலிதாவும் சேர்ந்து கொண்டுசோனியாவை குறி வைத்துத் தாக்கி வருவது அசிங்கமான செயல்.
இதன்மூலம் தங்களது சாதனைகளைச் சொல்லி ஓட்டு கேட்கும் அருகதை இவர்களுக்கு இல்லை என்பதைவெளிப்படுத்திவிட்டனர்.
இதில் ஜெயலலிதா தான் மிகவும் தரம் தாழ்ந்து போய் பேசிக் கொண்டிருக்கிறார். காரணம், அந்த அளவுக்குஅவருக்கு அரசியல் எதிர்காலம் குறித்த பயம் வந்துவிட்டது தான்.
காங்கிரஸின் கை சின்னத்தில் மட்டுமே சிவகங்கையில் போட்டியிடுகிறேன், எனது கட்சியை காங்கிரஸுடன் இணைக்கவில்லை.காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை தொடர்ந்து தனித்தன்மையுடன் செயல்படும்.
மதுரையில் பாமக தொண்டர்களுக்கும், ரஜினி ரசிகர்களுக்கும் இடையிலான மோதல் வருத்தம் தருகிறது. ரஜினிகாந்த் எனதுநல்ல நண்பர், நானும் அவரது நல்ல நண்பர்ன். எங்களுக்குள் கருத்து மோதல் வராது. கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதோடுநின்று விட வேண்டும், கைகலப்புகள் கூடவே கூடாது. மதுரை சம்பவம் மதுரையோடு முடிந்து விட வேண்டும், அது தொடரக்கூடாது என்றார் சிதம்பரம்.












Click it and Unblock the Notifications