மதுரையில் சத்யநாராயணா உண்ணாவிரதம்: மாநிலம் முழுவதும் போராட்டம்
மதுரை:
ரஜினி ரசிகர்கள் மீது பாமக தொண்டர்கள் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து மதுரையில் ரஜினி ரசிகர் மன்றத் தலைவர்சத்யநாராயண ராவ் தலைமையில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. அதே போல மாநிலம் முழுவதுமே ரஜினிரசிகர்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகின்றனர்.
மதுரையில் ராமதாஸுக்கு ரஜினி ரசிகர்கள் கருப்புக் கொடி காட்டியதை போலீசார் தடுக்காததால் இரு தரப்பினருக்கும் இடையேஅடிதடி ஏற்பட்டது. இதில் ரஜினி ரசிகர்களை பாமக தொண்டர்கள் அடித்து உருட்டினர். பலருக்கு மண்டை உடைந்தது.
இதைத் தொடர்ந்து பா.ம.கவினர் மீது ரஜினி ரசிகர்கள் கல்வீச்சு நடத்தினர். இதையடுத்து பா.ம.கவினர் அரிவாள்களைத்தூக்கினர். பல ரசிகர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
இச் சம்பவம் குறித்து சிருங்கேயில் உள்ள ரஜினிக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவத்தைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தரஜினிகாந்த் உடனடியாக மதுரை செல்லுமாறும் ஞாயிற்றுக்கிழமை அங்கு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும்படியும்,சத்யநாராயண ராவுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து மதுரை தமுக்கம் மைதானம் எதிரே, தந்தி அலுவலகம் அருகே ரஜினி ரசிகர்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டம்நடத்துகிறார்கள். இதற்கு சத்யநாராயண ராவ் தலைமை தாங்குகிறார்.
இதேபோல, மாநிலம் முழுவதிலும் அமைதியான முறையில் கண்டன உண்ணாவிரதப் போராட்டம் நடத்துமாறும் ரசிகர்களுக்குசத்யநாராயண ராவ் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications