பா.ஜ.கவுக்கு ஆதரவாக ரம்பா பிரச்சாரம்
சென்னை:
கடன் தொல்லையில் சிக்கித் தவிக்கும் தொடையழகி நடிகை ரம்பா வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாகபிரசாரம் செய்யப் போவதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் எதிர்க் கட்சிகளை அவர் தொடை நடுங்க வைக்கவுள்ளார்.
பாரதிய ஜனதாக் கட்சியில் திரைப்பட நடிகர், நடிகைகள் அலை அலையாக சென்று சேர்ந்து ஆதாயம் கண்டு வருகிறார்கள். அந்தவரிசையில் தற்போது நடிகை ரம்பாவும் சேர்ந்துவிட்டார். இதன்மூலம் தனது சொந்தப் பிரச்சனைகளில் இருந்து வெளியே வரபாஜக உதவும் என்று நம்புகிறார்.
நேற்று சென்னைக்கு பிரதமர் வாஜ்பாய் வந்தபோது விமான நிலையம் வந்த ரம்பா, அங்கு பாஜக தலைவர் வெங்கையாநாயுடுவைச் சந்தித்து தெலுங்கில் பேசினார். பா.ஜ.கவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய விரும்புவதாகத் தெரிவித்தார். அவரைசந்தோஷமாக வரவேற்பதாக வெங்கையா கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் ரம்பா பேசுகையில், நாட்டை பாதுகாக்கும் தகுதி பாஜகவுக்கு மட்டுமே உள்ளது. பிரதமர்வாஜ்பாயால் மட்டுமே இந்தியாவை வல்லரசு நாடாக்க முடியும்.
எனவேதான் பாஜகவுக்கு ஆதரவு தர முடிவு செய்துள்ளேன். நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம், ஆந்திரா (இவரது சொந்த ஊர்)உள்ளிட்ட மாநிலங்களில் பிரசாரம் செய்வேன். தேவைப்பட்டால் இந்தியில் பேசியும் என்னால் பிரசாரம் செய்ய முடியும் (தமிழில்மட்டும் பேசத் தெரியாது!) என்றார்.
இதற்கிடையே, நடிகர் டெல்லி கணேஷ் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களும் பாஜகவில் சேரத் தயாராகி வருகிறார்கள். ஏற்கனவேபாஜகவுக்கு ஆதரவாக உள்ள நடிகர் எஸ்.வி.சேகரின் முன் முயற்சியால் அவருடன் முன்பு நாடங்களில் நடித்த பல நடிகர்கள்பாஜகவுக்கு பாய தயாராக உள்ளனர்.












Click it and Unblock the Notifications