தெருத் தெருவாய் ஜெ. சுற்றி வந்தாலும் என் வெற்றி உறுதி: டி.ஆர்.பாலு
சென்னை:
சென்னையில் முதல்வர் ஜெயலலிதா 50 நாள் சுற்றி சுற்றி வந்து பிரசாரம் செய்தாலும், எனது 8 ஆண்டுசாதனைகளே என்னை ஜெயிக்க வைக்கும் என்று தென் சென்னை திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு கூறினார்.
தென் சென்னையில் திமுக சார்பில் போட்டியிடும் பாலு இன்று நிருபர்களிடம் பேடுகையில்,
பேரறிஞர் அண்ணா, முரசொலி மாறன் ஆகியோரை வெற்றி பெற வைத்த தொகுதி தென் சென்னை. 96ல் இந்ததொகுதியில் என்னை வேட்பாளராக நிறுத்தினார் திமுக தலைவர் கருணாநிதி. அதன்பிறகு இதே தொகுதியில் 2முறை வெற்றி பெற்றுள்ளேன்.
தொடர்ந்து 4வது முறையும் எனக்கு வாய்ப்பு அளித்து தென் சென்னையில் நிறுத்தி உள்ளார் கருணாநிதி.தொகுதியில் 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நான் ஆற்றிய பணிகளை பொது மக்கள் அறிவார்கள். நாடாளுமன்றஉறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நான் ஏராளமான வளர்ச்சிப் பணிகளைச் செய்துள்ளேன்.
தார்சாலை, பள்ளிக் கட்டிடங்கள், தெருவிளக்குகள், பேருந்து நிழற்குடைகள், கால்வாய்கள், குடிநீர் இணைப்புகுழாய்கள் அமைத்தல், பள்ளிகளில் கணினி இணைய தொடர்பு அமைத்தல், சுடுகாட்டு சுற்றுச்சுவர் உள்ளிட்டஎண்ணற்ற பணிகளை கட்சி வித்தியாசம் இல்லாமல் அனைத்துப் பகுதிகளுக்கும் செய்துள்ளேன்.
பல்வேறு கிராமங்களின் ஊராட்சி தலைவர்கள் என்னை அணுகி பணிகள் செய்து தரும்படி கோரிக்கை வைத்தபோதெல்லாம் செய்துள்ளேன். இதேபோல ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதியில் ரூ. 196 லட்சத்துக்கு பணிகள்செய்துள்ளேன். பல்லாவரத்தில் ரூ.43.50 லட்சத்தில் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி பம்பு செட் அமைத்து கொடுத்துஉள்ளேன்.
மயிலை தொகுதிக்கு ரூ.52 லட்சத்திலும், சைதையில் அண்ணா சாலையில் மாநகர பேருந்து நிலையம் உள்படரூ.167 லட்சத்திலும், திருவல்லிக்கேணி தொகுதியில் ரூ.70 லட்சத்திலும், தி.நகர் தொகுதியில் ரூ.53 லட்சத்திலும்வளர்ச்சிப் பணிகள் செய்துள்ளேன். இது தவிர சென்னை, காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கும் கணினி கல்விபயிற்சிக்காக ரூ.110 லட்சம் ஒதுக்கினேன்.
இது தவிர ராணி மேரிக் கல்லூரியை காத்திருக்கிறேன், மீனவர் குப்பங்களை ஜெயலலிதாவிடம் இருந்துகாப்பாற்றி இருக்கிறேன்.
மத்திய அமைச்சர் பொறுப்பில் இருந்தபோது தேசிய நதிநீர் தூய்மை திட்டத்தில் சென்னைக்கு மட்டும் ரூ.149கோடி மானியம் கிடைக்க வகை செய்தேன். சென்னை உள்பட பல்வேறு தமிழக திட்டங்களுக்கு ரூ.1111 கோடிஒதுக்கப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் 669 திட்டங்கள் அனுமதிக்கப்பட்டபோது, தமிழ்நாட்டில் மட்டும் 142 திட்டங்கள் ரூ.26 ஆயிரம்கோடியில் அனுமதிக்கப்பட்டன. நான் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்ததால் இது சாத்தியமாயிற்று.
ஜெயலலிதா கூறுவதுபோல எந்த ஒரு திட்டத்தையும் நான் முடக்க வில்லை. எனக்கு மாற்றந்தாய் மனப்பான்மைஎல்லாம் கிடையாது. என்னை தோற்கடிப்பதற்காக ஜெயலலிதா தென் சென்னையில் 5 நாள் பிரசாரம்செய்யப்போகிறாராம்.
50 நாட்கள் சென்னையில் தெருத் தெருவாக ஜெயலலிதா சுற்றினாலும், நான் வெற்றி பெறுவேன். அவரால்தெருவில் அலையவிடப்பட்ட அரசு ஊழியர்கள் பெரும்பான்மையானவர்கள் என் தொகுதியில்தான் உள்ளனர்.அவர்களின் சாபம் இந்த ஆட்சியை சுட்டுப் பொசுக்கும். காலம் காலமாக குடியிருந்த ஆதம்பாக்கம் மக்களை ஒரேநாளில் வீடற்ற அனாதைகளாக ஆக்கியதை இந்த தொகுதி மக்கள் மறக்க மாட்டார்கள்.
நான் செய்த சாதனைகள் என் வெற்றிக்கு துணை நிற்கும். ஜெயலலிதா தந்த வேதனைகள் இந்த ஆட்சிக்கே வேட்டுவைக்கும் என்றார் பாலு.












Click it and Unblock the Notifications