சென்னை குடிநீர் பஞ்சத்துக்கு காரணம் கருணாநிதி தான்: ஜெ. குற்றச்சாட்டு
சென்னை:
சென்னை நகரில் நிலவும் கடுமையான குடிநீர் பஞ்சத்துக்கு கருணாநிதி தான் காரணம் என்று முதல்வர்ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.
தென் சென்னை அதிமுக வேட்பாளர் பதர் சயீதை ஆதரித்து வீதி வீதியாகப் பிரச்சாரம் செய்தஜெயலலிதா ஆங்காங்கே பேசியதாவது:
சென்னைக்கு குடிநீர் வழங்கும் புதிய வீராணம் திட்டத்தை நிறைவேற்ற எனது கடந்த ஆட்சிகாலத்தில் உலக வங்கி ரூ. 1,638 கோடி வழங்க முன் வந்தது. இந் நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுகருணாநிதி முதல்வரானார்.
அதிமுக கொண்டு வந்த திட்டம் என்ற ஒரே காரணத்துக்காக புதிய வீராணம் திட்டத்தை கருணாநிதிகைவிட்டார். அத்தோடு உலக வங்கியின் நிதி உதவியையும் ஏற்க மறுத்துவிட்டார். இது தமிழகமக்களுக்கு கருணாநிதி செய்த மிகப் பெரிய துரோகம்.
சென்னை நகர மக்கள் திமுகவுக்கு திரும்பத் திரும்ப வாக்களித்தாலும் துரோகத்தையே உங்களுக்குப்பரிசாக அளித்து வருகிறார் கருணாநிதி. இதனால் யார் நன்மை செய்கிறார்கள் என்று பார்த்து மக்கள்வாக்களிக்க வேண்டும்.
இப்போது எனது ஆட்சியில் மீண்டும் புதிய வீராணம் திட்டப் பணிகள் வேகம் பிடித்துள்ளன. மேமாதம் முதல் சென்னைக்கு வீராணம் நீர் வந்துவிடும் (வீராணம் ஏரியில் நீர் இல்லை என்பதுகுறிப்பிடத்தக்கது. ஏரிக்குள் நூற்றுக்கணக்கான போர்வெல்களை போட்டு நீரை எடுத்துதேர்தலுக்குள் சென்னைக்கு அனுப்பும் வேலை நடந்து போர்க் கால வேகத்தில் கொண்டுள்ளது.போர்களில் தண்ணீர் இருக்கும் வரை சென்னைக்கு நீர் வரும்).
இந்தியாவில் பிறந்த வாஜ்பாய் தான் மீண்டும் பிரதமராக வேண்டும். அயல் நாட்டைச் சேர்ந்தசோனியா எப்படி இங்கே பிரதமராக முடியும் என்றார் ஜெயலலிதா.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications