ராபின் மெயின் மோசடி: காளிமுத்துவை பதவி நீக்கக் கோரி வழக்கு
சென்னை:
ராபின் மெயின் மோசடி வழக்கில் தொடர்புள்ள சபாநாயகர் காளிமுத்து, அந்தப் பதவியில் நீடிக்கக் கூடாது என்றுகோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
போலி ஆவணங்கள் மூலம் கடன் வாங்கியதாக கேரளாவைச் சேர்ந்த ராபின் மெயின் என்பவர் மீது கடந்த 20ஆண்டுகளாக வழக்கு நடந்து வருகிறது. சிபிஐ இந்த வழக்கை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் சபாநாயகர்காளிமுத்துவும் ஒரு குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கிலிருந்து சபாநாயகர் காளிமுத்துவை சிபிஐ நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டது. ஆனால் இதை ரத்துசெய்து சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. சிபிஐ நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வழக்குவிசாரணைக்கு காளிமுத்து ஒத்துழைக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந் நிலையில் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துராமன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல்செய்துள்ளார். அதில், ராபின் மெயின் வழக்கில் காளிமுத்து மீண்டும் சேர்க்கப்பட்டிருப்பதால் அவர் வகித்து வரும்சபாநாயகர் பதவியிலிருந்து அவரை நீக்க வேண்டும். இல்லாவிட்டால் இது ஒரு தவறான முன்னுதாரணத்தைஏற்படுத்தி விடும் என்று கோரியுள்ளார்.
இந்த மனு மீது நாளை அல்லது நாளை மறுநாள் விசாரணை நடைபெறும் என்று தெரிகிறது.
-
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்!











Click it and Unblock the Notifications