கிடைக்குமா 113?: ஆட்சி அமைக்க சந்திரிகா தீவிரம்
கொழும்பு:
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்களில் அதிபர் சந்திரிகா குமாரதுங்காவின் ஐக்கி மக்கள் சுதந்திரக்கூட்டணிக்கு 105 இடங்களும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயின் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 82இடங்களும் கிடைத்துள்ளன.
225 எம்.பிக்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் ஆட்சி அமைக்க 113 இடங்கள் வேண்டும் என்றநிலையில் இரு கட்சிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
புலிகளின் ஆதரவு பெற்ற இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு 22 இடங்கள் கிடைத்துள்ளன. இந்தக்கூட்டணி ரணிலை ஆதரிக்கத் தயாராக உள்ளது.
புத்தத் துறவிகளின் கட்சியான ஜாதிக ஹெல உருமய கட்சிக்கு 9 இடங்கள் கிடைத்துள்ளன. இந்தக்கட்சி யாரையும் ஆதரிக்கப் போவதில்லை என்று அறிவித்துவிட்டது.
இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் கட்சிக்கு 5 இடங்களும், ஈ.பி.டிபி, யு.சி.பி.எப். ஆகிய கட்சிகளுக்குதலா ஒரு இடம் கிடைத்துள்ளது. தமிழ் அரசுக் கட்சியோடு, இந்தக் கட்சிகளின் ஆதரவு கிடைத்தாலும்கூட ரணிலால் குறைந்தபட்ச பெரும்பான்மையை எட்ட முடியாது என்பதால் அவர் ஆட்சியமைக்கஇயலாத சூழல் உருவாகியுள்ளது.
அதே நேரத்தில் முஸ்லீம் காங்கிரஸ், ஈபிடிபி, யுசிசிஎப் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு 113இடங்களைத் திரட்டி, குறைந்தபட்ச பெரும்பான்மையோடு, ஆட்சி அமைக்க சந்திரிகா முயன்றுவருகிறார்.
சந்திரிகாவின் கட்சிக்கு 45.60 சதவீத வாக்குகளும், ரணிலின் கட்சிக்கு 37.83 சதவீத வாக்குகளும்கிடைத்துள்ளன.
இதற்கிடையே அடுத்து யார் அமைத்தாலும் விடுதலைப் புலிகளுடனான அமைதிப்பேச்சுவார்த்தையை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று அமெரிக்கா கோரிக்கைவிடுத்துள்ளது.
இந் நிலையில் சந்திரிகாவின் செய்தித் தொடர்பாளர் ஹரிம் பெரிஸ் கூறுகையில், ஆட்சியைஅமைத்தவுடன் புலிகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவோம் என்றார்.
22 இடங்களில் தமிழ் வேட்பாளர்களுக்கு வெற்றியை உறுதி செய்ததன் மூலம் இலங்கைத் தமிழ்மக்கள் தங்களது வரலாற்றுச் சிறப்பு மிக்க கடமையை ஆற்றியுள்ளதாக விடுதலைப் புலிகள் இயக்கம்கூறியுள்ளது.
பிரதமராக யாரைத் தேர்வு செய்வது என்பது குறித்து ஜனதா விமுக்தி பெரமுனா உள்ளிட்ட தனதுகூட்டணிக் கட்சிகளுடனும் பிற கட்சிகளுடனும் அதிபர் சந்திரிகா இன்று ஆலோசனைநடத்தவுள்ளார்.
முன்னாள் அமைச்சர் லட்சுமண் கதிர்காமரை பிரதமராக்க வேண்டும் என ஜே.வி.பி. பரிந்துரைசெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications