ஜாதிக் குழப்பங்கள்.. வேட்பாளர்களின் வருத்தங்கள் !

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வேட்பாளர் தேர்வு தொடர்பாக தமிழக அரசியல் கட்சிகளின் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தி வெடித்துள்ளது.

தமிழகத்தைப் பொருத்தவரை ஜாதியை வைத்துத்தான் இன்னும் பல பேர் ஓட்டுப் போட்டு வருகிறார்கள். யார்,எந்தக் கட்சி, என்ன செய்துள்ளார் என்றெல்லாம் பார்க்காமல், நம்ம ஆளா என்று மட்டுமே பார்த்து ஓட்டுப்போடுவோர்தான் அதிகம் உள்ளனர். இதனால் ஜாதிக் கட்சிகளுக்கு இணையாக பிற கட்சிகளும் ஜாதிவிளையாட்டு நடத்தி பிழைப்பு நடத்துகின்றன.

ஆனால், இம்முறை அனைத்துக் கட்சிகளும் ஜாதியை மீறி ஆங்காங்கே மாற்று வேட்பாளர்களைப் போட்டுள்ளனர்.இது நல்ல முன் உதாரணம் தான் என்றாலும், அதை ஏற்க தொண்டர்களில் ஒரு பிரிவினர் தயாராக இல்லை.

தங்களது சமூகத்தினர் அதிகம் வசிக்கும் தொகுதியில் வேறு ஜாதியைச் சேர்ந்தவரை வேட்பாளராக்கிய தலைமைக்குஎதிராக பல இடங்களில் தொண்டர்களின் அபஸ்வர குரல் ஒலிக்க ஆரம்பித்துள்ளது.

பல தொகுதிகளிலும் பெரும்பான்மையாக உள்ள ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கு சீட் கொடுக்காமல் வேறுஜாதியினருக்கு சீட் கொடுத்து விட்டதாக கிட்டத்தட்ட அனைத்துக் கட்சிகளிலும் அதிருப்தி நிலவி வருகிறது.

சேலம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தங்கபாலுவுக்கு எதிராக அப் பகுதியில்பெரும்பான்மையாக வசிக்கும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த காங்கிரசார் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.தங்கபாலு நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல, வன்னியர்கள் அதிகம் உள்ள கடலூல் திமுக வேட்பாளராக வெங்கடபதி நிறுத்தப்பட்டுள்ளார். இவர்நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் இங்கும் திமுக வன்னிய இனத் தொண்டர்கள் மத்தியில் அதிருப்திஅடைந்து சரியாக தேர்தல் வேலைகளைப் பார்க்காமல் உள்ளனர்.

இவரை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிடும் சொரத்தூர் ராஜேந்திரன் வன்னியர் என்பதால் அவருக்குஆதரவாக சில வன்னிய இன திமுக புள்ளிகளே செயல்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.

அரக்கோணத்திலும் இதே கதைதான். இங்கு முதலியார்கள் தான் அதிகம்.ஆனால் பாமக சார்பில் நிறுத்தப்பட்டுள்ளவேலு, வன்னியர் ஆவார். இதனால் பாமகவுக்குள்ளேயே கடும் அதிருப்தி நிலவுகிறது.

சிவகாசியில் மதிமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள ரவிச்சந்திரன் நாயுடு சமூகத்தை சேர்ந்தவர் ஆவார், இவர்வைகோவுக்கு தூரத்து உறவும் கூட. ஆனால் சிவகாசி தொகுதியில் எண்ணிக்கையில் நாடார்களுக்குஅடுத்தபடியாகத் நாயுடு வகுப்பினர் உள்ளனர். இதனால் இங்கும் ஒரு பிரிவு மதிமுகவினர் இடையே அதிருப்தி.

புதுக்கோட்டையில் திமுக சார்பில் நிற்கும் முன்னாள் அமைச்சர் ரகுபதி, செட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர்ஆவார்.ஆனால் தொகுதியில், முக்குலத்தோர் மற்றும் முத்தரையர்கள்தான் அதிகம் வசிக்கின்றனர். இதனால் இவரைநிறுத்தியதற்கு திமுகவிலேயே எதிர்ப்பு நிலவுகிறது.

இருப்பினும் திருநாவுக்கரசரின் மமுைறக ஆதரவோடு அவரது ஜாதியான முக்குலத்தோரின் வாக்குகளைப் பெற்றுவெற்றிக் கனியைப் பறித்து விடலாம் என்ற நம்பிக்கையில் உள்ளார் ரகுபதி.

திமுக கூட்டணியில் வேலூர் தொகுதியை தேசிய முஸ்லீம் லீக்குக்கு கொடுத்துவிட்டதால் அங்கு தேர்தல் வேலைபார்க்காமல் ஒதுங்கிக் கொண்டார் பா.ம.கவின் முன்னாள் அமைச்சர் சண்முகம். வன்னியருக்கு சீட் தராமல் இந்தத்தொகுதி முஸ்லீமுக்குப் போனதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை.

இதையடுத்து கடுப்படைந்த பா.ம.க. தலைவர் ராமதாஸ், சண்முகத்தை சென்னைக்கு கூப்பிட்டு அனுப்பி,ஒருமையில் திட்டி, கடுமையாக எச்சரித்து அனுப்பினார். இதைத் தொடர்ந்து தான் தேர்தல் வேலைகளையே பார்க்கஆரம்பித்தார் சண்முகம்.

அதே போல பல்வேறு தொகுதிகளும் ஜாதி மாற்றி வேட்பாளர்களை நிறுத்தி முதல்வர் ஜெயலலிதாவும் அதிரடிசெய்துள்ளார். இதனால் ஆங்காங்கே அதிமுகவிலும் ஜாதிப் பூசல் ஒலிக்கிறது.

இப்படி பல்வேறு தொகுதிகளிலும் ஜாதிக் குழப்பங்கள் இருப்பதால், அந்தந்த வேட்பாளர்கள் பெரும் அச்சத்தில்உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+