மதுரை உயர் நீதிமன்ற கிளைக்கு எதிரான மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

மதுரையில் உயர் நீதிமன்றத்தின் கிளை அமைக்கப்படுவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டுமனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுரேஷ்குமார், உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையைத் தொடங்குவதற்குசட்டரீதியாக அங்கீகாரம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனு அங்குதள்ளுபடி செய்யப்பட்டது. அதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது சுரேஷ்குமார் சார்பில், மூத்த வழக்கறிஞர் அனில் திவாண் ஆஜரானார். உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை அமைப்பது தொடர்பாக 1995 மற்றும் 2000-ல் உயர் நீதிமன்றத்தில் தீர்மானம்நிறைவேற்றப்பட்டதைத் தவிர, கிளை துவக்குவதற்கு சட்டரீதியான எந்த அதிகாரமும் அளிக்கப்படவில்லை.

சட்ட வடிவம் இல்லாமல் உயர்நீதிமன்றக் கிளை அமைக்க முடியாது. ஆனால் வரும் 13-ம் தேதி கிளைதிறக்கப்படுவதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது என்று அவர் வாதிட்டார்.

இதனையடுத்து, பத்திரிகைச் செய்தியின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முடியாது என்று கூறி நீதிபதிவரியவா தலைமையிலான பெஞ்ச் மனுவைத் தள்ளுபடி செய்தது. உயர் நீதிமன்றக் கிளை அமைப்பது தொடர்பாககுடியரசுத் தலைவர் அறிவிப்பு செய்தாலோ, நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வரப்பட்டாலோ அதைஎதிர்த்து வழக்குத் தொடரலாம் என்று மனுதாரர்களுக்கு நீதிபதிகள் அனுமதி அளித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+