திருச்சியைக் கலக்கும் அதிமுகவின் பரஞ்சோதி
திருச்சி & சென்னை:
திருச்சி அதிமுக வேட்பாளர் பரஞ்சோதி டவுன் பஸ்களில் ஏறி வாக்கு சேகரித்து திருச்சியைக் கலக்கி வருகிறார்.
திருச்சியில் அதிமுக சார்பில் பரஞ்சோதி தேர்தலில் போட்டியிடுகிறார். திருச்சி தொகுதிக்குட்பட்டகிராமப்புறங்களில் ஏற்கனவே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் பரஞ்சோதி. வயல் வெளிகளுக்குச் செல்லும்அவர் அங்கு வேலைகளில் ஈடுபட்டுள்ள ஆண்கள், பெண்களிடம் வாக்கு சேகரிக்கிறார். அப்படியே சிறிது நேரம்அவர்களது வேலைகளையும் செய்து கொடுத்து விட்டு குட்பாய் என்று பெயரைத் தட்டிச் செல்கிறார்.
பின்னர் திருச்சி நகரில் பிரசாரத்தைத் தொடங்குகிறார். பஸ் நிலையத்திற்கு வரும், அங்கிருந்து செல்லும் ஏதாவதுஒரு பஸ்சில், அதுவும் கூட்டமாக உள்ள பஸ்சில் ஏறிக் கொள்கிறார். பயணிகளிடம் தனக்கு வாக்களிக்குமாறும்,தான் செய்யப் போகும் திட்டங்களையும் கூறி வாக்கு சேகரிக்கிறார்.
பரஞ்சோதியின் இந்த அதிரடி ஓட்டு வேட்டை மதிமுக தரப்பினருக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. நமதுவேட்பாளர் எல்.கணேசன், பரஞ்சோதி அளவுக்கு சுறுசுறுப்பாக இல்லையே என்று அவர்கள் விரக்திஅடைந்துள்ளனர்.
ஜெவின் புதுவை பயணம்:
இந் நிலையில், பாண்டிச்சேரியில் பாஜக வேட்பாளர் லலிதா குமாரமங்கலத்தை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதாஇன்று புதுவையில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
இன்று பிற்பகல் சென்னையிலிருந்து கிளம்பி புதுவை செல்லும் ஜெயலலிதா அங்கு மாலை 3 மணிக்கு நடைபெறும்பொதுக் கூட்டத்தில் லலிதா குமாரமங்கலத்தை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
பின்னர் கடலூர் செல்லும் ஜெயலலிதா அதிமுக வேட்பாளர் சொரத்தூர் ராஜேந்திரனை ஆதரித்துப் பிரசாரம்மேற்கொள்கிறார். பின்னர் சிதம்பரம் செல்லும் அவர் அங்கு நாளை இரவு தங்குகிறார். ஓய்வுக்குப் பின்னர் 9ம்தேதி மாலை பாஜக வேட்பாளர் தடா பெரியசாமியை ஆதரித்துப் பிரசாரம் மேற்கொள்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications