எம்.பி அலுவலகத்தை காலி செய்ய டி.ஆர். பாலுவுக்கு ஜெ. உத்தரவு: நீதிமன்றம் தடை
சென்னை:
தென் சென்னை எம்.பி. அலுவலகத்தைக் காலி செய்யும்படி முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவுக்குசென்னை மாநகராட்சி அனுப்பிய நோட்டீசுக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துவிட்டது.
எம்.பி. அலுவலகத்தைக் காலி செய்யும்படி கடந்த 27ம் தேதி மாநாகராட்சி அதிகாரிகள் டி.ஆர் பாலுவிடம் நேரில்வந்து தெரிவித்தனர். பின்னர் 29ம் தேதி நோட்டீஸ் அனுப்பினர். இந் நிலையில் டி.ஆர்.பாலு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில்,
எனது தொகுதி மக்களை சந்திப்பதற்காக மாநகராட்சிக்கு சொந்தமான, சென்னை பனகல் பார்க் எதிரே தியாகராயர்சாலையில் அலுவலகம் ஒன்று 1996ம் ஆண்டு ஒதுக்கப்பட்டது
தற்போது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுவிட்டது. தேர்தலில் நான் மீண்டும் போட்டியிடுகிறேன். தேர்தல்வேலைக்காக வேறு அலுவலகம் ஒன்றை வேறு இடத்தில் தொடங்கியுள்ளேன். மாநகராட்சி ஒதுக்கியஅலுவலகத்தில் நான் தேர்தல் பணி எதுவும் செய்யவில்லை.
இந் நிலையில் எனக்கு ஒதுக்கப்பட்ட அலுவலகத்தைக் காலி செய்யும்படி மாநாகராட்சி சார்பில் நேரிலும்,நோட்டீஸ் மூலமும் கூறப்பட்டது. எனக்கு எந்த கால அவகாசமும் மாநகராட்சி வழங்கவில்லை. ஆளும் கட்சியைதிருப்திபடுத்தவதற்காகத் தான் இவ்வாறு மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
எனக்கு அனுப்பிய நோட்டீசில் மாநகராட்சி கமிஷ்னரின் கையெழுத்து கூட இல்லை. மேலும் தேர்தல் முடிந்துமுடிவு வெளியான பிறகுதான் புதிய எம்.பிக்கு அந்த அலுவலகம் தேவைப்படும்.
அதனால் உடனடியாக காலி செய்யும்படி எனக்கு நோட்டீஸ் அனுப்பியது தவறு. எனவே, இந்த நோட்டீசை ரத்துசெய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.ரவிராஜபாண்டியன், பாலுவுக்கு மாநகராட்சி அனுப்பிய நோட்டீசுக்குஇடைக்கால தடை விதித்தார்.
முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் துணை மேயர் கராத்தே தியாகராஜன் தான் இந்த நோட்டீஸ்அனுப்பியதாக திமுகவினர் கூறுகின்றனர்.
-
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications