ரஜினியை கட்டாயப்படுத்த மாட்டோம்: இல.கணேசன்
மயிலாடுதுறை:
பாஜக போட்டியிடும் 3 தொகுதிகளிலும் எங்களுக்கு ரஜினிகாந்த் கொடுத்துள்ள ஆதரவுக்கு நன்றி. இருப்பினும்அனைத்துத் தொகுதிகளிலும் ஆதரவு தரும்படி அவரை கட்டாயப்படுத்த மாட்டோம் என்று அகில இந்திய பாஜகசெயலாளர் இல.கணேசன் கூறியுள்ளார்.
மயிலாடுதுறை தொகுதிக்குட்பட்ட திருக்கடையூர் பகுதியில், அதிமுக வேட்பாளர் ஓ.எஸ்.மணியனுக்கு ஆதரவாகஇல.கணேசன் பிரசாரம் செய்தார். அப்போது, ரஜினிகாந்த் எங்களது நண்பர். அவரது முடிவை அவரே எடுப்பார்.அவருக்கு நெருக்குதல் தர மாட்டோம்.
3 தொகுதிகளில் பாஜகவுக்கும், 3 தொகுதிகளில் அதிமுகவுக்கும் ரஜினி ஆதரவு அளித்துள்ளது பாராட்டுக்குரியது.இதற்காக நன்றி. இருப்பினும் அனைத்துத் தொகுதிகளிலும் அவரது ஆதரவைக் கேட்டு கட்டாயப்படுத்தவிரும்பவில்லை. இதுகுறித்து அவரே முடிவெடுப்பார்.
ரஜினி ரசிகர்கள் மீது நடந்த கொலை வெறித் தாக்குதலை திமுக தலைவர் கருணாநிதி கண்டிக்கவில்லை. ஆனால்,பாமக போட்டியிடாத மற்ற 34 தொகுதிகளிலும் ரஜினி ரசிகர்களால் திமுக கூட்டணிக்கு பாதிப்பு வந்து விடக்கூடாது என்பதற்காக, ரஜினியை புகழ்ந்து பேசுகிறார் கருணாநிதி என்றார் கணேசன்.
ரஜினியின் ஆதரவுக்கு நன்றி என்ற அளவோடு பா.ஜ.க. நின்று கொள்வதற்கு முதல்வர் ஜெயலலிதாவின் தீவிரமானரஜினி எதிர்ப்பே காரணம் என்கின்றனர் விஷயம் அறிந்தவர்கள்
-
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications