குளித்தலையில் நடுரோட்டில் அரசு ஊழியர் கொலை- ரூ. 5 லட்சம் கொள்ளை
குளித்தலை:
குளித்தலையில் பட்டப் பகலில் நடுரோட்டில் அரசு ஊழியரைக் கொலை செய்துவிட்டு அவரிடம்இருந்த ரூ. 5 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் பலத்த காயமடைந்த இன்னொருஅதிகாரியின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
குளித்தலை பொதுப்பணித்துறை பாசனத்துறை ஆய்வாளராக இருக்கும் நத்தர் ஷாவும்உதவியாளராகப் பணியாற்றி வந்த காளியப்பனும் இன்று காலை வங்கிக்குச் சென்றனர்.
மணல் குவாரியில் இருந்து வசூலான பணத்தை ஸ்டேட் பாங்கில் அரசின் கணக்கில்செலுத்துவதற்காக அவர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
காலை 10.30 மணியளவில் குளித்தலை பெரிய பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரேமோட்டர்கள் சைக்கிளில் வந்த இரு வாலிபர்கள் அவர்களைத் தடுத்தனர்.
உடனே தங்களிடம் இருந்த அரிவாள்களுடன் அந்த இருவரும் அரசு ஊழியர்களைத் தாக்கஆரம்பித்தனர். காளிப்பனை அரிவாளால் தலையில் வெட்டி அவர்கள் அவர் வைத்திருந்த பையைப்பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளிலேயே தப்பிவிட்டனர்.
சுதாரித்து மோட்டார் சைக்களில் இருந்து இறங்குவதற்குள்ளாகவே இந்தத் தாக்குதலை நடத்திவிட்டுபணம் இருந்த பையையும் எடுத்துக் கொண்டு அவர்கள் திருச்சி ரோட்டில் பைக்கில் பறந்துவிட்டனர்.
இதில் காளியப்பன் அந்த இடத்திலேயே இறந்துவிட்டார். நத்தர் ஷா பலத்த காயங்களுடன்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆள் நடமாட்டம் மிக்க சாலையில் பட்டப்பகலில் நடந்துள்ள இந்தக் கொலை-கொள்ளை சம்பவம்அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆற்றில் மணல் கொள்ளைடிக்கும் கும்பலுக்கும்இதற்கும் தொடர்பிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
-
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு











Click it and Unblock the Notifications