பாமக தொகுதிகளுக்கு கூடுதல் படைகள்
சென்னை:
நாடாளுமன்றத் தேர்தலின்போது பாமக போட்டியிடும் தொகுதிகளில் பிரச்சனைகள் அதிகம் இருக்கும் என்றுஎதிர்பார்க்கும் மாநில தேர்தல் ஆணையம் இந்த 7 தொகுதிகளிலும் கூடுதல் மத்தியப் படைப் போலீஸாரைபாதுகாப்புக்கு அனுப்புமாறு உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் பதட்டம் நிறைந்த தொகுதிகளாக 25 தொகுதிகள் கண்டறியப்பட்டு உள்ளன. இவற்றில் சில குறிப்பிட்டதொகுதிகளுக்கு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக துணை ராணுவத்தை அனுப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளது.
சென்னை, கோவை, தர்மபுரி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமாரி, விழுப்புரம், கடலூர், தேனி, பெரம்பலூர்ஆகிய மாவட்டங்களில் துணை ராணுவம் நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தீவிரவாத அமைப்புகளின்செயல்பாடுகள் உள்ள தர்மபுரி, கடலூர், -ஜெயங்கொண்டம் பகுதிகளில் கூடுதல் படை அனுப்பவும்தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
இதில் விழுப்புரம், தர்மபுரி, கடலூர், பெரம்பலூர், ஜெயங்கொண்டம் பகுதிகளில் பாமக செல்வாக்கு பெற்றபகுதிகள், மேலும் சாதிக்கலவரம் நடந்த தென் மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகப்படுத்தவும்திட்டமிடப்பட்டு உள்ளது.
இதற்கிடையில் தமிழ்நாட்டில் தேர்தல் பாதுகாப்புக்காக 65 கம்பெனி மத்திய படையை அனுப்ப மத்திய அரசுஉத்தரவிட்டுள்ளது. மத்திய ஆயுதப் படை 25 கம்பெனிகள், மத்திய தொழில் பாதுகாப்புப் படை 25 கம்பெனிகள்,எல்லை பாதுகாப்புப் படை 15 கம்பெனிகள் ஆகியவை தமிழகத்துக்கு வரவுள்ளன.
மேலும் 10 கம்பெனி துணை ராணுவப் படையை அனுப்பும்படி மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் மூலம்கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. துணை ராணுவத்தை அனுப்ப முடியாத பட்சத்தில் அண்டை மாநிலங்களில்இருந்து காவல் படையை அனுப்பும்படி தேர்தல் ஆணையம் கோரியிருக்கிறது.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications