ரோஜாவுக்கு சீட் தர எதிர்ப்பு: தெலுங்கு தேசம் தொண்டர்கள் கலவரம்- போலீஸ் துப்பாக்கிச் சூடு
ஹைதராபாத்:
தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் ஆந்திர மாநிலம் நகரி சட்டசபை தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தநடிகை ரோஜாவை அந்தக் கட்சியின் தொண்டர்களே தாக்க முயன்றனர். இதையடுத்து தொண்டர்களைகத் கலைக்கபோலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
செக் மோசடி வழக்கு மற்றும் நிதிப் பற்றாக்குறையில் சிக்கித் தவித்து வரும் நடிகை ரோஜா தெலுங்கு தேசம்கட்சியில் திடீர் உறுப்பினர் ஆனார்.
இந் நிலையில் ஆந்திராவில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில் நகரி தொகுதியிலிருந்து துரைசாமி ராஜூஎன்ற தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளர் போட்டியிடுவார் என தெலுங்கு தேசம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து நேற்று அவர் தனது ஆதரவாளர்களுடன் பிரம்மாண்ட பேரணி நடத்தி வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.
இந் நிலையில் திடீரென அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட முதல்வர் சந்திரபாபு நாயுடு, இந்தத் தொகுதிரோஜாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த தெலுங்கு தேசத் தொண்டர்களும் ராஜூவின் ஆதரவாளர்களும் பெரும் போராட்டத்தில்இறங்கினர். தெலுங்கு தேசத்தின் கொடிக் கம்பங்களை வெட்டி எறிந்தனர். பஸ் மறியல் போராட்டமும் நடத்தினர்.
சந்திரபாபு நாயுடு, ரோஜாவின் கொடும்பாவிகளும் பல இடங்களில் எரிக்கப்பட்டன. இந் நிலையில் இன்று காலைமனு தாக்கல் செய்யப் போவதாக பத்திரிக்கைகளில் ரோஜா விளம்பரம் கொடுத்திருந்தார்.
இதைத் தொடர்ந்து அவர் மனு தாக்கல் செய்ய வந்தால் தடுப்போம் என அறிவித்த அப் பகுதியின் தெலுங்கு தேசத்தொண்டர்கள் சென்னை- திருப்பதி நெடுஞ்சாலையில் மரங்களை வெட்டியும் சாலைகளில் போட்டுபோக்குவரத்தைத் தடுத்தனர். உடனடியாக போலீசார் விரைந்து வந்து மரங்களை அகற்றி போக்க்குவரத்தை சீர்செய்தனர்.
இந்தப் போராட்டங்கள் காரணமாக ரோஜா காலையில் வரவில்லை. பிற்பகலில் வேட்பு மனு தாக்கல் செய்ய தனதுகணவரும் இயக்குனருமான ஆர்.கே. செல்வமணியுடன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வந்தார். அப்போதுதெலுங்கு தேசம் தொண்டர்கள் ரோஜாவின் கார் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தினர்.
இதில் ரோஜாவுக்குப் பாதுகாப்பாக வந்த குண்டர் படையினர் 10 பேர் பலத்த காயமடைந்தனர். நிருபர்கள் பலரும்காயமடைந்தனர்.
இதையடுத்து போலீசார் வானத்தை நோக்கி 9 முறை துப்பாக்கியால் சுட்டு கூட்டத்தைக் கலைத்தனர். பின்னர்பெரும் பாதுகாப்புடன் ரோஜா தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். போட்டி வேட்பாளராக துரைசாமிராஜுவும் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
ரோஜாவுக்கு சீட் தரப்பட்டதைக் கண்டித்து நகரி பகுதியின் மண்டல பொறுப்பாளர்கள் பலரும் தெலுங்கு தேசம்கட்சியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளனர்.
தமிழ் சினிமாவால் வாழ்ந்த ரோஜா, செட்டில் ஆவதற்காக தனது சொந்த மாநிலமான ஆந்திராவுக்குப்பறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications