பாண்டிச்சேரி: கூட்டம் சேராததால் பேச்சை சுருக்கிய ஜெயலலிதா
கடலூர்:
தீவிரவாதத்தையும், பிரிவினைவாதத்தையும் ஒழிக்க அதிமும, பாஜகவால் மட்டுமே முடியும். எனவே 40தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று முதல்வர்ஜெயலலிதா கூறினார்.
முன்னதாக பாண்டிச்சேரியில் பொதுக் கூட்டத்தில் பேசச் சென்ற ஜெயலலிதா, அங்கு கூடியிருந்த கூட்டத்தைபார்த்து அப்செட் ஆனார். பாதி மைதானம் காலியாகக் கிடந்ததால் பத்தே நிமிடங்களில் பேச்சைமுடித்துவிட்டு இறங்கிவிட்டார்.
கடலூரில் பேச்சு:
கடலூர் அதிமுக வேட்பாளர் சொரத்தூர் ராஜேந்திரனுக்கு ஆதரவாக நடந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் ஜெயலலிதாபேசினார். எழுதி வைத்திருந்த உரையை ஜெயலலிதா படித்தார்.
அவர் கூறியதாவது:
100 கோடி இந்தியர்களை ஆளும் தகுதி யாருக்கு உள்ளது. அனுபவம் நிறைந்த வாஜ்பாய்க்கா, அரைவேக்காடு சோனியாவுக்கா?நீங்களே தீர்மானியுங்கள்.
காவிரிப் பிரச்சினையில் கருணாநிதி துரோகம் இழைத்து விட்டார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 2 மத்திய அமைச்சர்களைக்கொண்டிருந்தும் காவிரி நீரை தமிழகத்திற்குக் கொண்டு வரத் தவறி விட்டனர். தமிழகத்தின் மீது அவர்களுக்கு அக்கறை இல்லை.
தமிழக நலன் குறித்துக் கவலைப்படுவதை விட்டு விட்டு எனது அரசு கொண்டு வர முயன்ற பல நல்ல திட்டங்களை, நலத் திட்டங்களைநிறைவேற்ற விடாமல் தடுக்கும் முயற்சியில்தான் மத்தியில் இருந்த திமுக அமைச்சர்கள் மும்ரமாக ஈடுபட்டிருந்தனர்.
நாட்டில் நிலவும் தீவிரவாதம், பிரிவினைவாதம் ஆகியவற்றை ஒடுக்க பாஜகவினால் மட்டுமே முடியும். அதுபோலவேதமிழகத்தில் உலவும் பிரிவினைவாதிகளை ஒடுக்க அதிமுகவினால் மட்டுமே முடியும். எனவே 40 தொகுதிகளிலும் மக்கள் அதிமுக,பாஜக வேட்பாளர்களுக்கே வாக்களிக்க வேண்டும் என்றார் ஜெயலலிதா.
தனது அரசின் சாதனைகள் என்று எதையும் சொல்லி ஜெயலலிதா ஓட்டு கேட்கவேயில்லை.
கூட்டம் கூடாத பாண்டிச்சேரி:
முன்னதாக பாண்டிச்சேரியில் பாஜக வேட்பாளர் லலிதா குமாரமங்கலத்தை ஆதரித்தும் ஜெயலலிதா பிரசாரம் செய்தார்.
பின்னர் அண்ணா திடலில் நடந்த பொதுக் கூட்டத்துக்கு ஜெயலலிதா வந்தார். ஆனால், கூட்டம் இல்லாததால் பிரச்சாரவேனிலேயே உட்கார்ந்திருந்தார். இதையடுத்து அமைச்சர் ஜெயக்குமாரும் அதிமுக நிர்வாகிகளும் அங்கும் இங்கும் ஓடினர்.மைதானத்துக்கு வெளியே இருந்தவர்களை உள்ளே வருமாறு மைக்கில் கெஞ்சினர்.
அதிமுகவினர் கையைப் பிடித்து இழுக்காத குறையாக வெளியே இருந்தவர்களை எல்லாம் மைதானத்துக்குள் தள்ளிக் கொண்டுவந்தனர். அப்படியும் பாதி மைதானம் காலியாகக் கிடந்தது. இதையடுத்து சிறிது நேரத்தில் மேடைக்கு வந்த ஜெயலலிதா, சேரில்கூட உட்காராமல் நேராகப் போய் மைக்கைப் பிடித்தார்.
சரியாக 10 நிமிடம் மட்டும் பேசிவிட்டு கிளம்பிச் சென்றுவிட்டார். பேச்சில் புதுவை முதல்வர் ரங்கசாமியை கடுமையாக சாடினார்ஜெயலலிதா. காவிரி விஷயத்தில் கருணாநிதியோடு சேர்ந்து கொண்டு தமிழகத்தின் நலனுக்கும் புதுவை மக்களுக்கும் துரோகம் செய்தவர்ரங்கசாமி என்றார். பின்னர் வழக்கம்போல் வாய்ச் சவடால் வைகோ, ஜாதி வெறியர் ராமதாஸ் என வழக்கமான பேச்சைரீ-பிளே செய்தார்.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications