குடிபோதையில் சப் இன்ஸ்பெக்டரை தாக்கிய போலீசார் !
மதுரை:
மதுரை அருகே அருப்புக் கோட்டையில் குடிபோதையில் இருந்த காவலர்கள் தாக்கியதில், சப்-இன்ஸ்பெக்டர்காயமடைந்தார்.
அருப்புக்கோட்டை நகர காவல் நிலையத்தில் ஏட்டையாவாக இருப்பவர் ராதா. காவலராக இருப்பவர் சரவணன்.இந்த இருவரும் நேற்று மதுரைக்கு அலுவலகரீதியாக வந்தனர். பின்னர் மது பாட்டிலை வாங்கிக் கொண்டு பஸ்நிலையம் அருகே உள்ள ஒரு ஹோட்டலுக்கு சென்றனர்.
அங்கு வைத்து அவர்கள் மது அருந்த முயன்றனர். பட்டப் பகலில் பொதுமக்கள் வந்து செல்லும் ஹோட்டலில் மதுஅருந்த காவலர்கள் முயற்சிப்பதைப் பார்த்த ஹோட்டல் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார். காவலர்களிடம்சென்று இங்கு மது அருந்தக் கூடாது என்று கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த இரு கேடு கெட்ட ஜென்மங்களும் ஹோட்டல் உரிமையாளரை தாறுமாறாகதிட்டிவிட்டு கொண்டு வந்த சரக்கை ராவாக உள்ளே தள்ள ஆரம்பித்தனர்.
இதையடுத்து ஹோட்டல் உரிமையாளர் காவல் நிலையத்தைத் தொடர்பு கொண்டு, சப் இன்ஸ்பெக்டர்ஜெயசீலனிடம் புகார் கொடுத்தார்.
ஜெயசீலன் உடனடியாக ஹோட்டலுக்கு விரைந்து வந்தார். குடிபோதையில் இருந்த இரண்டு காவலர்களையும்திட்டிய அவர் இருவரையும் ஜீப்பில் ஏறுமாறு உத்தரவிட்டார்.
ஆனால் அதற்குள் படு போதைக்குப் போய்விட்ட இரு காக்கிகளும் சப் இன்ஸ்பெக்டர் ஜெயசீலனை தாக்கத்தொடங்கினர். இதில் ஜெயசீலன் காயமடைந்தனர்.
இதையடுத்து ஹோட்டலுக்கு சாப்பிட வந்த பொது மக்கள் சண்டையைத் தடுத்து இரு தரப்பினரையும் விலக்கிவிட்டனர். அதன் பின்னர் கூடுதல் காவல்களை ஹோட்டலுக்கு வரவழைத்த ஜெயசீலன், அந்த இரண்டுஜென்மங்களையும் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு சென்றார்.
இந்த இருவர் மீதும் வழக்கு ஏதும் தொடரப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை.
-
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications