வீராணம் நீர் வராவிட்டால் பதவி விலக ஜெ. தயாரா?: ஸ்டாலின் கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை & மேட்டுப்பாளையம்:

மே மாதம் சென்னைக்கு வீராணம் குடிநீர் வராவிட்டால் பதவியை ராஜினாமா செய்ய ஜெயலலிதாதயாரா என திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின் சவால் விட்டார்.

மத்திய சென்னை, தென் சென்னை திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி ஏற்பாடுசெய்த பொதுக் கூட்டம் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் நடந்தது. இதில் காங்கிரஸ் தலைவர்வாசன், முன்னாள் தலைவர் இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக் கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது:

ஜெயலலிதா சென்னை 2 நாட்களாக சுற்றிச் சுற்றி வந்திருக்கிறார். எங்கும் அவருக்கு ஆதரவில்லை.பல இடங்களில் பிரியாணி பொட்டலம், பணம் கொடுத்து கூட்டத்தைக் கூட்டி வந்துள்ளனர்.

தமிழகத்துக்கு கருணாநிதி துரோகம் செய்துவிட்டதாக பேசும் ஜெயலலிதாவே, கடந்த 3ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தீர்களே. உங்களது சாதனை என்று எதையாவது ஒன்றைசொல்லுங்கள் பார்ப்போம்.

இதைச் செய்தேன், ஓட்டு போடுங்கள் என்று கேட்க ஜெயலலிதாவுக்கு துணிவிருக்கிறதா?ஜெயலலிதாவின் யோக்கியதையை மக்கள் உணர்ந்துவிட்டார்கள்.

வீராணம் திட்டத்தால் சென்னைக்குத் தண்ணீர் தர முடியாது என்பதை பல நிபுணர் குழுக்களைவைத்துத் தெரிந்து கொண்ட பின்னர் தான் அத் திட்டத்தை வருத்தத்தோடு கைவிட்டார் கருணாநிதி.

இப்போது அந்த பயனில்லாத திட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு மே மாதத்துக்குள் தண்ணி வரப்போகுது என்கிறார் ஜெயலலிதா. நான் சவால் விடுகிறேன். மே மாதத்துக்குள் தண்ணீர் வராவிட்டால்பதவி விலக ஜெயலலிதா தயாரா?

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சட்டசபையிலேயே பிராடு என்றார் ஜெயலலிதா.கர்நாடகத்தை ஆளும் கிருஷ்ணாவின் ஆட்சியை கலைக்க வேண்டும் என்றார். பின்னர் அந்தமாநிலங்களிடம் இருந்து எப்படி நமக்குத் தண்ணீர் வரும்? என்றார் ஸ்டாலின்.

பின்னர் மேட்டுப்பாளையத்தில் பிரச்சாரத்துக்குச் சென்ற ஸ்டாலின் அங்கு நிருபர்களைச் சந்தித்தார்.அவர் கூறுகையில்,

தமிழகம் முழுவதும் இருந்தும் வரும் தகவல்களைப் பார்க்கும்போது பாண்டிச்சேரியையும் சேர்த்து40 இடங்களிலும் எங்கள் கூட்டணி வெல்லும் என்று எதிர்பார்க்கிறோம். ஜெயலலிதாவுக்கும் அதுதெரிந்துவிட்டது. இதனால் தேர்தல் ஜுரத்தில் அவதிப்படுகிறார்.

இதனால் தான் வாய்க்கு வந்தபடி எல்லோரையும் திட்டி விமர்சித்துக் கொண்டிருக்கிறார்.சென்னைக்குத் தண்ணீர் தர முடியாது என்று தெரிந்தும் வீராணம் திட்டத்தை மீண்டும் ஜெயலலிதாகையில் எடுத்திருப்பது அதில் பணம் அடிக்கத் தான் என்றார்.

ரஜினியால் பிரச்சனையில்லை: நெப்போலியன்இந் நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகரும், திமுக எம்.எல்.ஏவுமான நெப்போலியன்,தனது ஆதரவு யாருக்கு என்பதை ரஜினிகாந்த் வாய் திறந்து சொல்லவில்லை. அவரது ரசிகர்கள்தான் பேசிவருகிறார்கள். எனவே ரஜினி ரசிகர்களின் பாமக எதிர்ப்பால் திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படாது.ரஜினி திமுக கூட்டணிக்கு ஆதரவாகத்தான் இருப்பார் என்று கருணாநிதி கூறியுள்ளார். அவரது வார்த்தைகளையேநாங்கள் நம்புகிறோம். 35 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று முன்பு கணித்திருந்தோம். போகிற போக்கையும்,மக்கள் மன மாற்றங்களையும் பார்த்தால் கூடவே சில தொகுதிகள் கிடைக்கும் என்று ஊகிக்கிறோம் என்றார்நெப்போலியன்.ராதிகாவிடம் ஓட்டு கேட்ட பாலு:நடிகர் சரத்குமார்- ராதிகா ஆகியோரின் வீட்டுக்குச் சென்று தென் சென்னை தொகுதி திமுக வேட்பாளர்டி.ஆர்.பாலு ஒட்டுக் கேட்டார்.தென் சென்னை தொகுதி திமுக வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு சென்னைகொட்டிவாக்கத்தில் உள்ள சரத்குமாரின் வீட்டுக்குச் சென்றார்.அவரை சரத்குமாரும், ராதிகாவும் வரவேற்றனர்.பின்னர் தனக்கு உதயசூயன் சின்னத்தில் வாக்களிக்குமாறு டி.ஆர்.பாலு சிரித்தவாறே கேட்டார்.பின்னர் பிரசாரத்தை எப்போது தொடங்குகிறீர்கள் என்று சரத்குமாரிடம் டி.ஆர்.பாலு விசாரித்தார். விரைவில்தொடங்கவுள்ளதாக சரத்குமார் பதிலளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+