மே 10: ஜெ அரசுக்கு முடிவுரை எழுதும் நாள்- வாசன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மே 10ம் தேதி வாஜ்பாய் அரசுக்கு மக்கள் முடிவுரை எழுதப் போகிறார்கள் என்று தமிழக காங்கிஸ் தலைவர்ஜி.கே.வாசன் கூறினார்.

சென்னை அருகே உள்ள மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் சாமி கும்பிட்ட பிறகு வாசன் தனது தேர்தல்பிரசாரத்தைத் தொடங்கினார்.

அவர் பேசுகையில், நாடு முழுவதும் வேலையில்லாத் திண்டாட்டத்தை அதிகமாக்கி உள்ளது தேசிய ஜனநாயகக்கூட்டணி அரசு. அவர்களது பொருளாதாரக் கொள்கைகள் நாட்டை பலவீனமாக்கி விட்டன.

ஒரு கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்கப் போவதாக கடந்த தேர்தலின்போது கூறினார்கள். அந்த வாக்குறுதிஎன்னவாயிற்று என்றே தெரியவில்லை. இப்போது மீண்டும் அதே போன்ற வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்கள்.

மத்திய அரசைப் போலவே மாநிலத்திலும் மிக மோசமான ஆட்சியில் சிக்கி தமிழக மக்கள் அவதிப்படுகிறார்கள்.காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்த ஜெயலலிதா இப்போது மக்கள் விரோதக் கொள்கைகளை அவிழ்த்துவிட்டு மக்களைக் கொடுமைப்படுத்தி வருகிறது.

மே 10ம் தேதி வாஜ்பாய் ஆட்சிக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள். ஜெயலலிதாவின் ஆட்சிக்கு முடிவுரையைஎழுதுவார்கள் என்றார்.

இந் நிலையில் இன்று வாசன் நிருபர்களிடம் பேசுகையில், சென்னையில் 4 லட்சம் வாக்காளர்களின் பெயர்களும்,தமிழகத்தின் பிற பகுதிகளில் சுமார் 1 லட்சம் வாக்காளர்களின் பெயர்களும் பட்டியலில் இருந்து விடுபட்டுப்போயுள்ளது மர்மமாக உள்ளது.

மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் அதிமுகவுக்கு பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதை தேர்தல்ஆணையம் உடனடியாகத் தடுக்க வேண்டும்.

இவர்களை மீண்டும் பட்டியலில் சேர்க்க தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாட்டிலேயே கல்வி அறிவும், விழிப்புணர்ச்சியும் அதிகம் பெற்ற இரண்டாவது மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.ஆனால் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் குறைந்த அளவிலேயே வாக்குகள் பதிவாகின்றன.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 58 சதவீத வாக்குகளே பதிவாகின. கிராமப்புறங்களைக் காட்டிலும்நகர்ப் புறங்களிலேயே குறைந்த அளவு வாக்குகள் பதிவாகின்றன.

வாக்குரிமை பெற்ற அனைவரும் தங்களது வாக்குகளை செலுத்தி ஜனநாயக கடமை ஆற்றிட முன்வர வேண்டும்.ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிக அளவில் வாக்குகளை செலுத்த முன்வர வேண்டும்என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+